வாகநேரி நீர்பாசன திட்ட அறுவடை விழா



(மு.கோகிலன்)

வாகநேரி நீர்பாசன திட்ட அறுவடை விழா வட்டி போட்ட மடு பூலாக்காட்டில் பிரதேச விவசாய அமைப்பின் தலைவர் சி.புஸ்பாகரன் தலைமையில் நேற்று  சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் விவசாய அமைச்சர் கி.கரிசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.

ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன்,தமிழரசு கட்ச்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஓட்டமாவடி பிரதேச சபைத் தலைவர் ஏ.ரி.அமிஸ்டிம் மற்றும் நீர்பாசனதிணைக்கள உயர் அதிகாரிகள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர் உரையாற்றும் போது ..........

நெல்லின் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் தங்களது இலாபத்தினை அடைய முடியாமல் உள்ளனர். கடந்த 4 வருடங்களாக நெல்லின் விலையில் அதிகரிப்பு ஏற்படவில்லை. இதனை தடுக்க அடுத்த போகத்தில் நெல்லின் விலையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இப்பிரதேசத்தில் சேதமடைந்து காணப்படும் நெல் களஞ்சிய சாலையினை புணர்த்தாரணம் செய்தல் விலால் ஓடை திட்டத்தனை முன்னெடுத்தல்,விவசாய வீதிகளை அபிவிருத்தி செய்தல் கிரான் புல்அணைக்கட்டு திட்டம்,மற்றும் கித்துள் உறுகாமம் திட்டங்களை ஒன்றினைத்து மேலதிக விவசாய செய்கையினை ஏற்படுத்தல் போன்றன தமக்கு இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அரச பிரதிநிதிகளினால் எனது கவனத்திற்கு முன்வைக்கப்ட்டது என்ம் மேற்படி விடயங்களை தமது அமைச்சின் ஊடாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை நீண்ட காலமாக புணர்தாரனம் செய்யப்படாது சேதமடைந்து காணப்பட்ட பூலாக்காடு எரிக்கலங்கட்டு பாலமானது 29.6 மில்லியன் ரூபா செலவில் கட்டுவதற்கும் இன்று அமைச்சரினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.