மீண்டும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகள் எழுர்ச்சி பெறும் வகையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன



(டினேஸ்)

தமிழ் மக்கள் பேரவையின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக பேரவையின் இணைத்தலைவர்களின் ஒருவரான தம்பிப்போடி வசந்தராஜாவின் பிரத்தியேக சந்திப்பு நேற்று  10 ஆம் திகதி அவரது இல்லத்தில் நடைபெற்றது இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்............

தமிழ் மக்களைப் பொருத்தவரையில் இன்றைய நிலையில் உள்ள பாரிய பிரச்சனையாக அமைவது காணி பிரச்சனையாகும் பொதுமக்கள் குடியிருக்கப்படும் காணி தொழில் செய்யவேண்டிய காணிகள் அநேகமானவை பெரும்பாலும் இராணுவப்படையினரின் கைவசம் இருக்கின்றது அதேபோன்று நில அளவை திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் , மற்றும் வனவிலங்கு இலாகா திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் மூலமாக பொதுமக்கள் குடியிருக்க அவர்கள் தொழில் செய்ய முடியாத வகையில் காணிகளை எடுத்து வைத்திருக்கின்றார்கள்.

அதேநேரம் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்களது காணிகளும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து போன மக்களது காணிகளும் தற்போது படையினரிடமும் வேறு சில நபர்களிடமும் போய்ச்சேர்ந்திருக்கின்றது இந்த காணிகள் அனைத்தும் உரிய மக்களிடம் போய் சேரவேண்டும் என்பதே எல்லோருடைய கருத்தாகவும் விருப்பமுமாக அமைகின்றது.

வடகிழக்குப்பகுதிகளில் உள்ள மக்களது காணிகள் எவ்வளவு படையினர் வசமுள்ளது அல்லது வேறு திணைக்களங்களிடம் உள்ளது என்ற விபரங்கள் அதாவது காணிகளின் அளவுகள் புள்ளிவிபரத் தகவல்கள் எம்மிடம் இல்லை அதனடிப்படையிலேயே இறுதியாக நடைபெற்ற சந்திப்பின் போது காணி விடயங்கள் தொடர்பான உபகுழு ஒன்றிணை உருவாக்கியுள்ளது அவர்கள் இந்தவிடயங்களில் கைதேர்ந்தவர்கள் என சொல்லப்படுகின்றது அக்குழுவின் மூலமாக வடகிழக்குப் பகுதிகளில் எங்கு காணிப்பிரச்சனைகள் இருக்கின்றன அதன் அளவுகள் என்ன என்று தகவல்களைத் திரட்டி ஒரு வரைவாக வடிவமைத்து ஆவணப்படுத்தி அவ்வாவணத்தின் மூலமாக உரிய துறையினரிடம் கதைத்து அதற்குரிய பிரச்சனைகளை தீர்ப்பதற்காக தமிழ் மக்கள் பேரவை ஒரு முயற்சி ஒன்றிணை செய்து வருகின்றது.

கேள்வி :- கடந்த 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையில் எழுக தமிழ் எழுர்ச்சி நிகழ்வின் பின்னர் மக்கள் மத்தியில் எவ்வாறான மனநிலை உள்ளது ?

பதில் :- எழுக தமிழ் நிகழ்ச்சியின் போது மக்கள் மத்தியில் ஒரு எழுர்ச்சி இருந்தது வடக்கிலும் இருந்தது கிழக்கிலும் இருந்தது ஆனால் அந்த எழுர்ச்சி நிகழ்வின் பின்னர் தமிழ் மக்கள் பேரவை பாரிய அளவிலான நிகழ்வுகளை நடாத்தவில்லை என்பது வெளிப்படையான உண்மை ஆனால் அண்மையில் நடைபெற்ற பேரவையின் சந்திப்பின் போது இணைத்தலைவர்களின் ஒருவரான முன்னாள் நீதியரசர் சீ.வீ விக்னேஸ்வரன் ஜயா அவர்கள் கூறியிருந்தார் தமிழ் மக்கள் பேரவை மீண்டும் எழுர்ச்சி பெற செய்ய வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார் ஆலோசனையில் அடிப்படையிலே தமிழ் மக்கள் பேரவை பல காரியங்களை செய்வதற்கு திட்டமிட்டிருக்கின்றார்கள்.

முதலில் நாம் கலந்துரையாடல்களை நடாத்துவது குறைவாக இருந்தது ஆனால் தற்பொழுது தமிழ் மக்கள் பேரவையானது மாதாந்தம் சந்திப்புக்களை ஏற்படுத்தி பல தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவதற்கான காரியங்களை செய்துகொண்டிருக்கின்றது ஏனென்றால் ஒரு சமுகத்திற்காக விடுதலையை நோக்கி செல்வதாகவிருந்தால் தோய்ந்து போன நிலையில் இருந்துகொண்டு காரியங்களை செய்யமுடியாதென்பது எல்லோரும் தெரிந்த விடயம் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் விடுதலை உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் காரியத்திற்காகவே உருவாக்கப்பட்டது பேரவை ஒரு அரசியல் கட்சி அல்ல ஒரு சிவில் அமைப்பு. தமிழ் மக்களின் இலக்கை அல்லது நோக்கத்தை அடைவதற்காக செயற்படுவதினால் மீண்டும் தமிழ் மக்கள் பேரவை எழுர்ச்சி பெற்றுவருவதற்கான தீர்மானங்கள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்பது இணைத்தலைவர்களின் ஒருவரான நான் இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி :- கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமை தொடர்பாக விவகாரத்தில் தமிழ் மக்கள் பேரவை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன கருத்துக்கள் என்ன ?

பதில் :- அப்பிரதேச மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயரத்தப்பட்டு சேவையை செய்ய வேண்டும் என்பது தமிழ் மக்கள் பேரவையின் அவா உண்மையிலேயே 1989 ஆம் ஆண்டு இலங்கையில் 28 உப பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்ட போது கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் ஒன்று ஆனால் 1993 ஆம் ஆண்டு இந்த 28 பிரதேச செயலகமும் தரமுயர்த்தப்பட்டது என கூறப்பட்டது அந்த நேரத்தில் இருந்த மந்திரிசபை தெரிவித்திருந்தது ஆனால் அந்த தரமுயர்த்தலுக்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருசாரார் தடை ஒன்றை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தமையாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது.

சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளுக்கு மற்றுமொரு சிறுபான்மை இனம் தடைவிதிக்காமல் இருப்பதுதான் சாத்தியம் காரணம் சிறுபான்மை இனத்தவர்கள் ஒன்றிணைத்தால் தான் அவர்களது பொதுவான பிரச்சினையை தீர்த்துக்கொள்ளமுடியும் கல்முனை விடயத்தில் ஒரு மாறுபட்ட காரியமாக இருப்பது மனவருத்தத்திற்குரிய விடயம் ஆகவே இப்பிரச்சினைக்கு அனைவரும் ஒன்றிணைந்து அப்பிரதேச செயகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் பேரவை பூரண ஆதரவாக அமையும் அத்துடன் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி முன்வரும் இந்த பௌத்த மதத்தைச்சேர்ந்த பிக்குகள் தேரர்கள் ஆதரவு தெரிவிப்பது என்பது எவ்வளவு தூரம் சரி பிழை என்பது எம்மால் தீர்மானிக்கமுடியாத விடயமாக அமைகின்றது 

ஆகையினால் சிறுபான்மை இனத்தவர்கள் இருவரும் ஒன்றிணைந்து அவர்களது பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன் என தமிழ் மக்கள் பேரவையில் இணைத்தலைவர் தம்பிப்போடி வசந்தராஜா கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.