மாற்றுத்திறனாளிக்கு சக்கரநாற்காலி வழங்கும் நிகழ்வு



(எஸ்.எம்.எம்.முர்ஷித்)


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு சக்கரநாற்காலி வழங்கும் நிகழ்வு செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸ்ஸம்மில், உதவி பிரதேச செயலாளர் எஸ்.எல்.அல்அமீன் உட்பட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

எறாவூரை பிறப்பிடமாக் கொண்டு பிறைந்துறைச்சேனையில் வசித்து வரும் 38 வயதுடைய யூசுப் அப்துல் அஸீஸ் என்பவர் வீதியில் தவண்டும், ஊன்றுகோலின் உதவியில் தனது காலத்தை கஸ்டத்தின் மத்தியில் கழித்து வந்தார்.

எனவே இவரை நிலைமையை கருத்தில் கொண்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தரின் வேண்டுகோளின் பிரகாரம் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் உதவியில் சக்கரநாற்காலி வழங்கி வைக்கப்பட்டது.

வீதியில் தவண்டும், ஊன்றுகோலின் உதவியில் தனது காலத்தினை அழுக்காக கழித்த நிலையில் செயகத்தினால் இவரை சுத்தமான மனிதனாக மாற்றியமைத்து உதவி வழங்கி வைக்கப்பட்டது.