கிழக்கு மாகான முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி பட்டறை



ஓசியன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் மாகாண முன்பள்ளி பணியகத்துடன் இணைந்து கிழக்கு மாகான முன்பள்ளி பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்ற ஆசிரியர்களில் தெரிவு செய்யப்பட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி மற்றும் முன்பள்ளி சிறார்களின் போசாக்கு சிறுவர்களுக்கான முதலுதவி போன்ற திறனை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயத்தில் நடைபெறுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஓசியன் ஸ்டார் லங்கா நிறுவன உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் ஓசியன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் டிலானி பண்டர் தலைமையில் மூன்று நாள் நடைபெறுகின்ற பயிற்சி பட்டறையின் ஆரம்ப நாள் நேற்று மாலை மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயத்தில் நடைபெற்றது

மூன்று நாட்கள் நடைபெறுகின்ற பயிற்சி பட்டறையின் ஆரம்ப நாள் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன் , மண்முனை வடக்கு திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் ,மட்டக்களப்பு கொக்குவில நாமகள் வித்தியாலய அதிபர் குணசீலன் , வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டல் ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஓசியன் ஸ்டார் லங்கா நிறுவன உத்தியோகத்தர்கள் ,முன்பள்ளி ஆசிரியர்கள் ,மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பணியக வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.