ஒலிம்பியா விளையாட்டுக் கழகத்தின் 32வது நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கிரிக்கற் சுற்றுப்போட்டியில் கோல்டன் மற்றும் ஒலிம்பியா விளையாட்டுக்கழகங்கள் வெற்றிவாகை சூடின



(ரவிப்ரியா)

பெரியகல்லாறு ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 32வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற ரி20 மென்பந்துகிரிக்கற் சுற்றப்போட்டியில் 17வயதிற்கு கீழ்பட்டோருக்கான அணிகளுக்கான போட்டியில் வெற்றி; கிண்ணத்தை ஒலிம்பியா விளையாட்டுக்  கழகமும், 17வயதிற்கு மேற்பட்ட அணிகளுக்கான போட்டியில் கோல்டன் விளையாட்டுக்  கழகமும் கிண்ணங்களை சுவீகரித்துக் கொண்டன. கிண்ணங்களை திருகோணமலை நீர்ப்பாசன திணைக்கள பிரதி பணிப்பாளா எந்திரிகோ.சுஜிதரன், மற்றும் களுவாங்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஸி.யுகுணவர்தன ஆகியோர் வழங்கிவைப்பதையும் கிண்ணங்களுடன் வெற்றி பெற்ற அணியினரையும் அதிதிகளையம் படங்களில் காணலாம்.

கழகத்தின் தலைவர் இரா.கோபாலசிங்கம் தலைமையில் பெரியகல்லாறு பொது விளையாட்ட மைதானத்தில் ஞாயிற அன்று(11) நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மலைநாட்ட பதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றம் சமுதாயஅபிவிருத்தி அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் ம.பிரசாந,; கழகத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எஸ்.ரங்கராஜ்(போட்டிக்கான முழு அனுசரணையாளர்) ஆகியோரும், விசெட அதிதிகளாக திருகோணமலை மாகாண பிரதி நீர்ப்பாசனபணிப்பாளா கோ.சுஜிதரன்,களுவாஞ்சிக்கடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 

அதிவிசேட அதிதிகளாக பிரதெச சபை உறுப்பினர்களான ச.கணேசநாதன் மற்றும் த.சுதாகரன். ச.குகநாதன், ஸ்ரீலங்கா சதந்திரக்கட்சியின் தமிழா ஒன்றிய தலைவரம். பட்டிருப்பு தொகுதி இணை இணைப்பாளருமான த.கங்காதரன், ஆகியோரும், விசெடஅதிதிகளாக திருகோணமலை மாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கோ.சுஜிதரன், களுவாஞ்சிக்கடி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி ஏ.ஜி.யு.குணவர்தன, களுவாஞ்சிக்குடி அதிரடிப்படை பொறுப்பதிகாரி டி.எம்.எஸ்.திசாநாயக்கா மற்றும்கௌரவ அதிதிகளாக ; ஆலயங்களின் தலைவர்கள் மதகுரமார் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அமரர்; சௌந்தரநாயகம் ஞாபகார்த்தமாக உள்ளூர் கழகங்களிடையே நடைபெற்ற இந்த கிரிகற் சுற்றுப் போட்டியில் 10அணிகள் பங்கேற்றன. ஒருமாத காலமாக நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் இறுதிப்போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. 17வயதிற்குட்பட்டோர் போட்டியில் ஒலிம்பியா விளையாட்டுக் கழகம் கிண்ணத்தைச் சுவீகரித்தது.

17வயதிற்க மெற்பட்ஆடாh இணியில் இறதிப் பொட்டியில் கோல்டன் விளையாட்டுக் கழகமும் சூரியா விளையாட்டுக்கழகமும். மோதி 27ஓட்டங்களால் கோல்டன் விளையாட்டுக் கழகம் அபார வெற்றி பெற்றது.

தலைவரும், அனுசரணையாளரும் தங்கள் எரைகளில் பின்வரமாற குறிப்பிட்டனர்.கல்வியில் பெயர்பெற்று விளங்கியகிராமம் மீண்டும் கல்வியில் எழுச்சிபெற அனைத்து கழகங்களம் கல்வி அபிவிருத்திக்கு கை கொடுக்க வேண்டும். கழகபேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் கிராம நலன் கருதி செயற்பட வேண்டும்.

எமது கழகம் கல்விக்கான தனியான ஒரு பிரிவை ஏற்படுத்தி கல்வி வளர்ச்சிக்காக உத்வேகத்துடன் செயற்பட இருக்கின்றது.கல்வி உதவிகளுக்கு எம்மோடு தொடர்புகளை எவரும் மேற்கொள்ளலாம்.

அத்துடன் தனியே கிரிக்கறறை மட்டும் விளையாடாமல் ஏனைய விளையாட்டுக்களான வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் என்பவற்றிலம் எமது கவனத்தை திருப்பியுள்ளோம்.;

பிரதம அதிதிகளில் ஒருவராக கலந்த கொண்ட பிரத்தியேகச் செயலாளர் ம.பிரசாத் தனதுரையில் கிரிக்ற் போட்டி மிகவும்சிறப்பாக நடைபெற்றதாகவும். வீரர்கள் தங்கள் திறமையை உலக கிண்ண கிரிக்ற் போட்டிகளுக்கு நிகராக வெளிப்படுத்தியதுமகிழ்ச்சி தருவதாகவும், உடற்கட்டை சீராக வைத்திருப்பதற்கும், பேணுவதற்கும் இத்தகைய போட்டிகள் வழி வகுக்கின்றனஎன்றும் தலைவர் கூறியதுபோல் கல்விக்கும் இந்தக் கழகம் பங்களிப்புச் செய்ய இருப்பது பாராட்டுக்கரியது என்றும்குறிப்பிட்டார். 

இதன்போது பல கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.