ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்பாட்ட பேரணி



(கனகராசா சரவணன்)

சஹ்ரான்களை உருவாக்கும் ஹிஸ்புல்லாவின் பல்ககலைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருமாறு கோரி மட்டக்களப்பில் பௌத்த தேர்கள் பொதுமக்கள் ஒன்றினைந்து ஆர்பாட்டத்தில்  திங்கட்கிழமை (19) ஈடுபட்டனர் .

பாராளுமன்ற உறுப்பினர் அத்திரலிய ரட்ண தேரர் மற்றும் இலங்கை தமிழ் மக்கள் கட்சி தலைவர் என். விஸ்ணுகாந்தன் ஆகியோர் ஒன்றினைந்து இந்த ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் 

இதனையடுத்து மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள இந்துக் கல்லூரி மைதானத்திற்கு முன்னாள் நூற்றுக்கு மேற்பட்ட பௌத்த தோர்கள் பொது மக்கள் என சுமார் 300 பேர்வரை ஒன்றிணைந்து அங்கிருந்து ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழக்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவோம் என ஆர்ப்பாட்ட பேரணியினை ஆரம்பித்தனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தை முஸ்லீம் தீவிரவாதத்தில் இருந்து பாதுகாப்போம் , நாட்டுக்கு இரண்டு நீதி வேண்டாம் , ஒரு நீதியே வேண்டும் . சரிதா சட்டம் எமக்கு வேண்டாம். ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழக்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். 

என பல வாசகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட பேரணியாக மட்டு நகர் மணிக்கூட்டுக் கோபுரத்தை வந்தடைந்கு மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தில் ஆர்பாட்டதில் ஈடுபட்டனர் அங்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் . இந்துகுருக்கள், மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வெள்ளிமலை, மட்டக்களப்பு மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர், பாராளுமன்ற உறுப்பினர் அத்திலியரட்ண தேரர் ஆகியோர் கலந்துகொண்டனர் 

இதனையடுத்து அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதேவேளை இந்த ஆர்பாட்டத்தையடுத்து அப்பகுதியால் வாகனங்கள் பிரயாணிக்க முடியாத நிலை சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஏற்பட்டது இதனையடுத்து வாகனங்கள் மாற்று வழிகளால் பொலிசார் ஏற்படுத்தினர் 

இதேவேளை ஆர்பாட்டம் அங்கு முடிவுக்கு வந்ததையடுத்து ஆர்பாட்டகார்கள் அங்கிருந்து   காந்தி பூங்காவிற்குள் சென்று காந்தியின் சிலைக்கு அருகில் கீழே அமர்ந்து அமைதியாக தியானம் செய்த பின்னார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.