திகோ/ கஞ்சிகுடிச்சாறு கணேஷா வித்தியாலத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடுகை விழா



[NR]

திருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/ கஞ்சிகுடிச்சாறு கணேஷா வித்தியாலத்தின்  8 மில்லியன் ரூபா  நிதி ஒதுக்கீட்டின் கீழ்    அமைக்கப்படவுள்ள புதிய  இருமாடி கட்டடத்திற்கான அடிக்கல் நடுகை விழா நிகழ்வானது 2019.08.12 திகதி திங்கட்கிழமை இன்றையதினம் வித்தியாலயத்தின் அதிபர் பொ.துரைராஜா தலைமையில் இடம்பெற்றது.


இன் நிகழ்வு திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்  ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.க.கேதீஸ்வரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் திருக்கோவில் வலய கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லினை சம்பிரதாயபூர்வமாக நட்டு வைத்ததுடன், திருக்கோவில் வலயகல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.குணாளன் மற்றும் திருக்கோவில் கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.இரவீந்திரன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள்  என பலரும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு வைத்தர்.

மேலும் இக் கட்டிடத்தொகுதி கிழக்கு மாகாணத்தின்  பி எஸ் டி ஜி (PSDG) திட்டத்தின் கீழ் 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இவ் புதிய  வகுப்பறைகளை கொண்ட புதிய இருமாடி கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.