வடக்கு கிழக்கை உள்ளடக்கி தென்னை உற்பத்தி அபிவிருத்தி முக்கோணத்திட்ட வலயம் அமைக்க அமைச்சர் நவீன் திசநாயக்கா திட்டம்.



(ரவிப்ரியா)

வடக்கு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் இலங்கை முழுக்க விநியோகம் செய்யப்பட்ட ஒரு பொற்காலம் யத்தத்தின் முன்பு இருந்தது. அத்தகைய ஒரு பிரதேசத்தில் தென்னை உற்பத்தியை மேம்படுத்தவதற்கான பிராந்திய தலைமை அலுவலகத்தை இன்றுதிறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

மேற்கண்டவாறு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பளைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமைக் காரியாலயத்தை சனியன்ற காலை திறந்து வைத்து பேசுவையில் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில குறிப்பிட்டட தமிழ் பேசும் மக்களுக்க மகிழ்ச்சி அளிக்க கூடிய விடயங்கள் பின்வரமாறு.

இப்பகுதிக்கான கண்காணிப்ப விஜயத்தின்போது நேரடியாக நான் கண்டறிந்த முக்கிய விடயங்கள் இரண்டு. ஒன்ற பிராந்திய அலுவலக கட்டடம் பூர்த்தி செய்யப்படாமை. எனது துரித பணிப்புரைகளக்கமைய அது பூர்த்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்படுகின்றது.

இக்காரியாலயம் மூலம் இனிமெல் இப்பகுதி தெங்கு உற்பத்தியாளர்கள் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான உதவித்திட்டங்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே புத்தளம் சிலாபம். குருநாகல் மாவட்டங்களை இணைத்து தெங்கு அபிவிருத்தி முக்கோண வலயம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களை இணைத்து ஒருமுக்கோண வலயம் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்து வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்வாங்கி மற்றுமொரு முக்கோண வலயத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இவற்றின் பயன் உடனடியாக கிடைக்காவிட்டாலும் கூட அதன் முழுமையான பயன்பாட்டை இன்னும் 10 வருடங்களில் அனுபவிக்க கூடியதாக இருக்கும். இவற்றிற்கு அதிகளவு காணி தேவையாக இருக்கும். எனினும் அத்தகைய காணிகளில் ஒரு அங்குலத்தை கூட நாம் தமிழ் மக்களின் அரசியல்தலைவர்களின் விருப்பத்திற்கு மாறாக பெற்றுக் கொள்ளமாட்டொம் என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்ட 10 பேரில் பெருமளவானோர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் பயிற்சியாளர்கள் என்பது இங்கு விசேடமாக சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.