கேகாலையில் இருந்து கல்முனைக்கு உறவுப்பயணம் வேலைத்திட்டம்




(செ.துஜியந்தன்) 


தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமும் இணைந்து இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர், யுவதிகளுக்கு இடையிலான உறவுப்பயணம் நிகழச்சி திட்டம் கடந்த வாரம் கல்முனையில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

கேகாலை மாவட்டத்தில் இருந்து வருகைதந்திருந்த சிங்கள இளைஞர் யுவதிகளுடனான உறவுப்பயணத்தின் இறுதி நாள் நிகழ்வு அண்மையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரிவின் இளைஞர் சேவைகள் அதிகாரி கு.பிரபாகரன் தலைமையில் கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் சங்கைக்குரிய ரன்முதுகல சங்கரட்ணதேரர், அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்னறத்தின் உதவிப்பணிப்பாளர் எச்.வி.சுசந்த இருதயநாதர் தேவாலயத்தின் பங்குத்தந்தை உட்பட பலர் கலந்துகொண்டார். 

உறவுப்பயணம் திட்டத்தின் கீழ் கேகாலையிலிருந்து கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இளைஞர் சேவைகள் கழகத்தின் 30பேர் கொண்ட சிங்கள இளைஞர், யுவதிகள் கல்முனைப்பிரதேசத்தில் தங்கியிருந்து தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் பற்றியும், புராதன இடங்கள், மற்றும் இன நல்லுறவுக்கான வழிகள் என்பன பற்றி களப்பயணங்கள் ஊடாக அறிந்து கொண்டனர்.

இறுதி நாள் நிகழ்வில் விளையாட்டு போட்டி, கலைகலாசார நிகழ்வுகள், விருந்துபசாரம் அகியன நடைபெற்று இவ் இளைஞர் பறிமாற்று வேலைத்திட்;டத்தில் பங்கு பற்றிய இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.