கிரான் புலிபாந்தகல் வீதி தொடா்பான கவனயீா்ப்பு போராட்ம்



(மு.கோகிலன்)


கிரான் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புலிபாய்ந்த கல் பிரதான வீதியினை புனரமைத்து தருமாறு கோரி பிரதேச மக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் இன்று புதன் கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் வீதியானது குண்றும் குழியுமாக காணப்படுவதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் மக்கள் பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கர்பினி தாய்மார்கள் ,மற்றும் நோயாளர்கள் இவ் வீதியில் பயணிப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் விவசாயிகள் அறுவடை காலங்களில் தங்களது நெல் மூட்டைகளை உழவு இயந்திரத்தில் இடம் நகர்த்துவதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக கிரான் பிரதேச செயலாளர் அலுவலகம், சுகாதார வைத்தியர்அதிகாரி அலுவலகம் கால் நடை வைத்தியர் அதிகாரி அலுவலகம்,விவசாய விரிவாக்கல் பிரிவு அலுவலகம் மற்றும் பிரபல்லியமிக்க கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயம் போன்றவற்றிக்கு சென்று வருவதற்க்கு இவ் வீதியூடாகவே பயணிக்கவேண்டியுள்ளது.

இப் பிரதேசத்தில் 14 பாடசாலைகள் அமைந்துள்ளன.அங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களும் இவ் வீதியினை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இவ் வீதியானது புணரமைப்பு செய்யாத காரணத்தினால் அடிக்கடி வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. பயணிக்கும் வாகனங்களின் இயந்திர உபகரணங்கள் சேதமடையும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருதாக சாரதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நீண்டகால குறைபாடாக காணப்படும் புலிபாய்ந்த கல் வீதியின் குறைபாடு தொடர்பாக பல தடைவகள் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டபோதிலும் இதுவரை இதற்கான எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதே பிரதேச மக்களின் கோரிக்கையாகும்.

இதே வேளை இவ் வீதியானது நீர்பாசன திணைக்களத்திற்குரியதா அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதா என்ற குழப்ப நிலை காணப்படுவதாகவும் இவர்களது இழுபரி நிலையே இவ் வீதி இவ்வாறு காணப்படுவதற்க்கு காரணம் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.