மாணவர்களுக்கு கணித எண்ணக் கருக்களை பிரயோக முறையில் தெளிவுபடுத்துவதற்காக 'கணித முகாம்'



2018ம் ஆண்டு வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கல்குடா கல்வி வலயம் தர வரிசையில் பின் தங்கி காணப்பட்டது. ஆனால் 2019ம் ஆண்டு வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கல்குடா கல்வி வலயம் தரவரிசையில் முன்னேறியுள்ளது. இதற்கு கல்குடா கல்வி வலயத்தில் கடமையாற்றும் அனைவரினதும் உழைப்பே காரணமாகும்.

அதனடிப்படையில் கல்குடா கல்வி வலயத்தின் கணிதத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. . அமலதாஸ் அவர்கள் மாணவர்களின் கணிதப் பாட பெறுபேறுகளை அதிகரிப்பதில் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார்.

அந்த வகையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட 3 கல்விக் கோட்டங்களான கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகியவற்றில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கணித எண்ணக் கருக்களை பிரயோக முறையில் தெளிவுபடுத்துவதற்காக 'கணித முகாம்' ஒன்றை ஒழுங்கமைத்து திறம்பட அமுல்படுத்தி வருகிறார்.

முதலாவது கணித முகாமானது கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு இம்மாதம் ஆகிய தினங்களில் பால்சேனை தமிழ் வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது. அதற்கடுத்த கட்டமாக ஏறாவூர்ப்பற்று கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு இம்மாதம் ஆகிய தினங்களிலும் ஏறாவூர்ப்பற்று கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு இம்மாதம் ஆகிய தினங்களிலும் நடாத்துவதற்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.