விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நடாத்திய விவாதப்போட்டி



விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நடாத்திய 'நல்லிணக்கத்திற்கான எங்கள் குரல்' பல்கலைக்கழக அணிகளுக்கிடையிலான விவாதப்போட்டி – 2019 ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் வெளிவிவகார அலுவலகத்தின் நிதி உதவியூடன் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்தும் நல்லிணக்க பொறிமுறைகளை உறுதிப்படுத்தல் செயற்திட்டத்துடன் இணைந்து விழுது நடாத்தும் விவாத போட்டிகள்
14.08.2019 அன்று மட்டக்களப்பு வந்தாறுமுலை வேல்ட் விசன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் விவாத அரங்கில்  06 அணிகளைக் கொண்ட 04 சுற்றுக்கள் இடம் பெற்றன இதில் கிழக்கு பல்கலைகழகத்தை சேர்ந் 05 அணிகளும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிலையத்தை சேர்ந்த 01 அணியூம் போட்டியிட்டது. இதன் நடுவர்களாக இதுவரை 64 பட்டிமன்றங்களுக்கு மேல் தனது தீர்பை வழங்கிய கதிரவன் பட்டி மன்றத்தினை சேர்ந்த நடுவர்கள் தீர்ப்பை வழங்கினர். இறுதியில் கடுமையான போட்டிகளின் பின்னர் இரண்டு அணிகள் தெரிவூ செய்யப்பட்டன. இரண்டு அணிகளுக்குமான இறுதிப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறும். 

இவ்விவாத அரங்கை பார்வையிட செங்கலடி பிரதேச சபை உதவித்தவிசாளர் கௌரவ இராமச்சந்திரன் அவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக இளைஞர்கழகங்களுக்கான விவாதப் போட்டிகள் இம்மாதம் இறுதியிலும் பாடசாலை மாணவர்களுக்கான விவாத போட்டிகள் ஆகஸ்ட் மாதமும் நடாத்தப்படும்.