ஜனாதிபதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது ஜே.வி.பி



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தனது வேட்பாளரின் பெயரை மக்கள் விடுதலை முன்னணி, இன்று (18) அறிவிக்கவுள்ளது.

இந்த நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் இன்று இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.