மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவு அபாய எச்சரிக்கை



(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)


சீர்ரற்ற காலநிலை காரனமாக நோர்வுட் நிவ்வெளிகம தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டமையினால் 12குடும்பங்களை சேர்ந்த 59பேர் இடம்பெயர்க்கபட்டு நோர்வுட் நிவ்வெளிகம தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கபட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 13.08.2019.செவ்வாய்கிழமை மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அம்பகமுவ பிரதேசசபைக்குட்பட்ட கினிகத்தேன நகரில் இரண்டு வர்த்த நிலையங்கள் மண்சரிவினால் பாதிக்கபட்டுள்ளதோடு மேலும் ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு மண்சரிவு அபாயம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினால் அறிவிக்கபட்டுள்ளதை அடுத்து ஐந்து வர்த்தக நிலையங்களில் உள்ளவர்களும் வெளியேற்றபட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேசசபை தெரிவித்துள்ளது 

மலையகத்தில் தொடர்ந்தும் பெய்த மலையின் காரனமாக நோர்வுட் நிவ்வெளிகம தோட்டபகுதில் உள்ள நான்காம் இலக்க லயன்குடியிருப்பில் பின்னால் உள்ள மண்மேடு சரிந்து விழுந்தமையினால் நான்கு வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதோடு மேலும் குறித்த பகுதியில் மண்சரிவு ஆபாயம் தென்படுகின்றமையால் நான்ங்காம் இலக்க லயன்குடியிருபில் உள்ள 12குடும்பங்களை சேர்ந்த 59பேர் வெளியேற்றபட்டு நிவ்வெளிகம தமிழ் வித்தியாலயத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கபட்டுள்ளனர்.

இதேவேலை வட்டவலை பகுதியில் பெய்த கடும் மலையின் காரனமாக வீடுகள் பல வெள்ள நீரில் முழ்கியுள்ளமையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கபட்டள்ளனர்

நேற்றய தினம் பெய்த கடும்மலையின் காரனமாக மஸ்கெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஒல்டன் பகுதியில் உள்ள ஆறு ஒன்று பெருககெடுத்ததனால் பல வீடுகள் வெள்ள நீரில் பாதிக்கபட்டுள்ளதோடு சாமிமலை ஒல்டன் தோட்டத்தில் உள்ள பிள்ளையார் ஆலயம் நீரில் முழ்கியுள்ளது 

அட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு மலையகத்தில் உள்ள நீர் தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து உள்ளதோடு தலவாகலை டெவன்போல் சென்கிளயார் மஸ்கெலியா மோகினி எல்லை ஆகிய நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டம் பெருக்கெடுத்துள்ளது.