மட்டக்களப்பில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்குடன் Emerging Players Programme அங்குரார்பணம்



மட்டக்களப்பில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமம் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. அதில் புதியதொரு வேலைத்திட்டம் தான் புலம்பெயர்ந்து வாழும் உறுப்பினர்களின் பங்களிப்புடன்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அது தான் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் நோக்குடன் எனும் பெயரில் 13 மற்றும் 15 வயதிற்குட்பட்ட இளம் வீரர்களை இனம் கண்டு பயிற்சியளிக்கும் நோக்குடன்  Emerging Players Programme அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம் இளம்; கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி தேசிய அணியில் இணைக்க முயற்சிப்பது. இதில் இன்று 30 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்வாங்கப்பட்டு இவர்களுக்கான சீருடை மற்றும் பாதணிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது. இவ்வீரர்களை எதிர்காலத்தில் தேசிய அணியில் இணைத்துக் கொள்வதற்கான சகல முயற்சிகளையும் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளது.; இன்னும் புதிய வீரர்களை இனி வரும் காலங்களில் இணைத்துக் கொளவதற்கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோட்டைமுனை விளையாட்டு கிராமம் மேற்கொள்ள Emerging Players Programme என்ற பெயரில் இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்டவுள்ளது இப்பணிகளை செயற்படுத்துவதற்காக ஒருங்கினைப்பாளராக திரு.வசந்தமோகன் அவர்களை கோட்டைமுனை விளையாட்டு கிராமம் நியமித்துள்ளது. இதில் முக்கிய விடயம் என்னவென்றால் 10 பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன் இவர்களுக்கான மேலதிக பயிற்சிகள் மிக விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்க்பட்டது.

இந்நிகழ்வில் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கலந்து கொண்ட திரு.ரமேஸ்குமார் அவர்கள் உரையாற்றுகையில் இவ்வமைப்பில் உள்வாங்கப்படும் வீரர்களுக்கு அதி சிறந்த பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் இதற்காக கொழும்பில் இருந்து மாத்திரமல்ல வெளி நாடுகளிலும் இருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் இவர்களை தென் மாகானத்தில் பிரபல கழகங்கள் மற்றும் பாடசாலைகளுடன் கடின பந்து கிரிக்கெட் போட்டிகளை ஏற்படுத்தி சுற்றுலா போட்டிகளை உருவாக்கவுள்ளதாகவும் இது மாத்திரமின்றி இந்தியா மலேசியா போன்ற நாடுகளுக்கும் பயிற்சி போட்டிகளுக்காக அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் எல்லாவற்றிக்கும் மேலாக தொடர்சியாக பயிற்சி கட்டுப்பாடான செயற்பாடு போன்றவற்றை கடைப்பிடப்போருக்கே இவ்வாய்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் அணித்தலைவர் திரு.பந்துல வர்ணபுர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தன் ஆரம்பகால கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செய்து வரும் பாரிய பணிகளில் இது சிறப்பு வாய்ததாகவும் கூறிப்பிட்டார். இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் திரு.சிவநாதன் செயலாளர் திரு.அருள்மொழி பொருளாளர் திரு.ரஞ்சன் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு.சடாற்சரராஜா பொருளாளர் திரு.தயாசிங்கம் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதி திரு.காசிப்பிள்ளை புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து வருகை தந்த திரு ரமேஸ்கண்ணா மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அங்கத்தவர்கள் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கோட்டைமுனை விளையாட்டு கிராமம் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்குடன் பாடசாலைகளுக்கான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்ததை சத்துருகொண்டான் கிராமத்தில் அமைத்து வருவதுடன் தற்போது வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் இப்பணிக்கு நாமும் உறுதுணையாக இருப்போம்