கோட்டாபய ராஜபக்ஷவின் உரையின் முழுமையான தமிழாக்கம்



சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, மஹிந்த ராஜபக்ஷவினால் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அறிவிக்கப்பட்டதன் பின்னர், தேசிய மாநாட்டில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவின் உரையின் தமிழாக்கம் பின்வருமாறு, 

வணக்கம்! அதி வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரே, கிறிஸ்தவ, இந்து இஸ்லாம் சமய மதகுருமார்களே, 

இலங்கை குடியரசின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்கலாக எல்லா பொது மக்கள் பிரதிநிதியாளர்களே, அரசியல் கட்சிகளின் தலைவர்களே, தொழில்வாண்மையாளர்களே, படைவீரர்களே, கலைஞர்களே, ஊடகவியலாளர்களே, தேசிய அமைப்புகளின் பிரதிநிதியாளர்களே, தொழிற் சங்க பிரதிநிதியாளர்களே, தாய் நாட்டில் ஒவ்வொரு கிராமங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இங்கு கூடியிருக்கும் மக்களே, இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள, எமது நாட்டுப்பற்றுடைய இலங்கையர்களே, நண்பர்களே.., 

இலங்கை அரசியலில் மிகவும் உறுதியான திருப்புமுனையை குறித்து நிற்கும், இந்த வரலாற்று மாநாட்டில், இலங்கை பொதுஜன முன்னணி முதன்மையான பல அரசியல் கட்சிகளினதும், சுயாதீன அமைப்புகளினதும் பல குழுக்களினதும், பொது நோக்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும், ஜனாதிபதி வேட்பாளராக இலங்கை பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ அவர்களால், இன்றைய தினம் என்னை பெயரிடுதல் தொடர்பில் நான் கௌரவத்துடனும் நேர்மையுடனும் ஏற்றுக்கொள்கின்றேன். 

அந்த வேட்புரிமையை நான் எவ்வாறு காண்கிறேன் என்றால், இந்த நாட்டில் எதிர்கால அரசியலில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்குவதற்குரிய மக்கள் சார்பான, முற்போக்கு சக்திகளினால் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட யுகத்தின் பணியாகவே ஆகும். இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன். கடந்த காலம் முழுவதும் நாட்டுக்காக குரல் எழுப்பிய மகா சங்கத்தினருக்கும், சமய மதகுருமார்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், தேசிய அமைப்புகளுக்கும், ஊடகவியலாளர் -களுக்கும், சமூக வலைதளங்களை பயன்படுத்துநர்களுக்கும், விசேடமாக நாட்டின் இளைய 

தலைமுறையினர் முதன்மையாகக்கொண்டு பொது மக்களுக்கும், நான் இந்தச் சந்தர்ப்;பத்தில் எனது கௌரவமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். விசேடமாக என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்த இலங்கை பொதுஜன முன்னணிக்கும் எனது நன்றியை இத் தருவாயில் தெரிவித்துக்கொள்கின்றேன். நான் என்து நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாட்டைப் பற்றி பெருமிதம் கொள்கின்றேன். எனக்கு எனது நாடு பற்றிய எதிர்கால நோக்கு உள்ளது. 

முழுமொத்த இலங்கை வாழ் மக்களுக்கும் தலைமைத்துவம் வழங்கி, தாய் நாட்டுக்கு சந்தோஷம் மற்றும் சுபீட்சம் என்பவற்றை மலரச் செய்வதற்கு கிடைக்கப்பெறும் இந்த வாய்ப்பினை நான் மிகவும் மெச்சுகின்றேன். ஓப்படைக்கப்படும் எந்தவொரு பொறுப்பையும் உயர் மட்டத்தில் நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் தயங்காத நான், மக்கள் முன்னிலையில் இன்றுள்ள சவாலை வெற்றியடைய செய்வறத்கு தயாராக உள்ளேன், என்பதை உங்கள் முன்பாக மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன். 

எனது 20 ஆண்டு தரைப்படை சேவையிலும், ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு அண்மித்த காலப் பகுதி அரசாங்க உத்தியோகத்தராகவும் சேவையாற்றும்போது என்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பினையும் வெற்றிகரமாக நிறைவேற்றினேன். நான் எப்போதும் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினை வரையறுக்குள் உட்படாது, அங்கீகாரங்களுக்கு அப்பாற் சென்று அப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுத்துள்ளேன். 

இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் நான் இளம் படை வீரராக சேவையாற்றும் காலப்பகுதியில், என்னால் தலைமைத்துவம் வழங்கிய ஒரு நடவடிக்கைச் சேவையினை மெச்சப்பட்டு, எனக்கு பாராட்டு கடிதம் அனுப்பி வைத்த, அப்போதைய படையில் பணியாற்றிய சிரேட்ட உத்தியோகத்தரான ஜெனரல் சிறில் ரணதுங்க அவர்கள் என்னைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார். 

“AN OFFICER WHO TAKES INITIATIVE OVER AND ABOVE THE NORMAL CALL OF DUTY” ஒப்படைக்கப்பட்ட பொறுப்பிற்கு அப்பாற் சென்று சேவையாற்றும் உத்தியோகத்தர்´ ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு அண்மித்தக் காலப் பகுதி நடைபெற்ற பயங்கரவாதத்தை 3 ½ ஆண்டுகள் போன்ற குறுகிய காலப் பகுதியில் முடிவுறுத்துவதற்கு, முப்படைத் தளபதியான மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களுக்கு தேவையான மூலோபாய மற்றும் நிருவாக ஒத்துழைப்பினை வழங்குவதற்கு, எனக்கு இயன்றதற்கான காரணம் அப் பண்பு என்னிடம் இருந்தமையாகும். 

அதே போன்று பின்னரான காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக, கொழும்பு நகரத்தை ஆசியாவின் வேகமாக முன்னேற்றம் அடைந்து வரும் நகரமாக உறுவாக்குவதற்கும், நகரத்தின் தொடுவான ரேகையை மாற்றியமைக்கும்; மனம்கவரும் பல முதலீடுகளை கொண்டு வருவதற்கும், முடிந்தமைக்கான காரணம், நான் ஒருபோதும் வரையறைகளுக்கள் உட்படாது பொறுப்புகளை நிறைவேற்றியமையாகும். 

அன்று நாட்டுக்காக எனது பொறுப்புகளை நிறைவேற்றும்போது, எந்தவொரு வெளியக சக்திகளும் அதற்கு தடையேற்படுத்துவதற்கு நான் இடமளிக்கவில்லை. எனது நாட்டை எதிர்பவர்களுக்கு நான் ஒருபோதும் தலை வணங்கியதில்லை. எதிர் காலத்திலும் எனது தாய் நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன். இன்று இந்த நாட்டுக்கு, எதிர் காலம் தொடர்பாக நோக்குகை உள்ள, நாட்டின் அபிவிருத்திக்கு திட்டமொன்று உள்ள, அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றல் உள்ள ஒழுக்கமுடைய, ஊழல்களற்ற மக்கள் நேயத்துடனான, நாட்டுப்பற்றுடைய தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. ஒரு சனாதிபதியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது அவ்வாறான தலைமைத்தவமாகும். 

நீங்கள் எதிர்பார்க்கும் தலைமைத்துவத்தை அளிக்கும் ஆற்றல் எனக்குள்ளது என்பதை நான் தற்போதும், எனது செயற்பாடுகள்மூலம் உறுதிப்படுத்தியுள்ளேன். எமது அரசாங்கத்தின் முதலாவது கடமைப் பொறுப்பு யாதெனில் நாட்டில் பூரண பாதுகாப்பினை உறுதிப்படுத்தலாகும். எமக்கு மீண்டும் இந்த நாட்டை உலகத்தில் பாதுகாப்பான நாடாக உருவாக்க முடியுமென நான் மிகவும் நம்பிக்கையுடன் கூறுகின்றேன். உங்களதும், உங்களது பிள்ளைகளதும் பாதுகாப்பின் பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கின்றேன். பௌத்த தத்துவ கோட்பாட்டினுள் எமக்கு, எல்லா சமயங்களுக்கும் கௌரவமளிக்கும்படி கற்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த எழுத்திலான வரலாற்றினைக் கொண்டுள்ள எமது நாட்டில் பல்வேறு இனத்தவர் வாழ்கின்றார்கள். அவர்கள் பல்வேறு சமயங்களை வழிபடுகின்றனர். 

நாம் எப்போதும் ஒவ்வொருவரினது சமயத்திற்கு கௌரவமளித்து, ஒவ்வொருவரினது கலாச்சார விழுமியங்களுக்கு மதிப்பளித்து நற்புறவுடன் வாழ்ந்த இனமாகும். எமது பலமாக அந்த ஒற்றுமை இருத்தல் வேண்டும். இந்த தாய் நாட்டில் பிறக்கும் எவரொருவரும் அச்சம, சந்தேகமின்றி வாழக் கூடியதான, பாதுகாப்பான சூழலை மீண்டும் கட்டியெழுப்புவேன் என்று நான் உறுதி கூறுகின்றேன். 

நான் ஒருபோதும் தீவிரவாத பயங்கரவாதத்திற்கு இடமளிக்க மாட்டேன். அதே போன்று வடக்கு மக்களுக்கு தேவையான, விசேடமான எதிர்பார்ப்புகள் பற்றி எமக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது. அவர்களின் இப் பிரச்சினைகளை எமது அரசாங்கத்தால் உறுதியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். 2015 - 2014 ஆகிய காலப் பகுதிகளில் மகிந்த சிந்தனை கொள்கையின்கீழ் எமது நாட்டில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டது. தற்போது நாம் அதிலிருந்து நாட்டை முன்கொண்டுச் செல்லுதல் வேண்டும். 

அதற்காக தற்கால உலகளாவிய பொருளாதார செல்நெறிகளுடன் எனது நோக்கினை ஒன்றிணைத்து எதிர் காலத்திற்கு தேவையான, புதிய திட்டங்களை சமர்ப்பிப்பேன். கடந்த காலப் பகுதியில் இந்த நாட்டின் கற்று அறிந்தவர்கள், தொழில்வாண்மையாளர்கள் மற்றும் வியாபாரிகள் அகியோருடன் இணைந்து ´வியத்மக´ போன்ற அமைப்புகளின்ஊடாக மேற்கொண்ட கற்கைகளின்மூலம் இலங்கை பொதுஜன முன்னணியால் கிராமத்துடன் உரையாடல் ´ (கம சமக பிலிசந்தரக்) ´ நிகழ்ச்சித்திட்டத்தின்மூலம் நாடு பூராகவும் சென்று, பொது மக்களுடன் கலந்துரையாடி பெற்றுக்கொண்ட அறிவினையும் நாம் இதன்போது பயன்படுத்துவோம் எமது நோக்கம் யாதெனில், பயனுள்ள பிரஜை, மகிழ்ச்சியுடன் வாழும் குடும்பம், ஒழுக்கமிக்க சமூகம் மற்றும் சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்புதலாகும். 

ஓவ்வொரு பிரஜைக்கும் பொருளாதார ஸ்தீரத்தன்மையும், முன்னேற்றமடைவதற்கு சம வாய்ப்பும், கௌரவத்துடன் வாழும் உரிமையும் இருத்தல் வேண்டும். அதற்கு தேவைப்படும் சூழல் கட்டியெழுப்பும் மக்கள் சார்ந்த, கேந்திர பொருளாதார கொள்கை நாம் அறிமுகப்படுத்துவோம். மனித வள அபிவிருத்தியை கட்டியெழுப்புதல் எமது அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாகும். 

நாட்டில் எதிர்கால தலைமுறையினரை பயனுள்ள பிரஜைகளாக்குவதற்கு தேவையான அறிவாற்றலால் அவர்களை மேம்படுத்துவதற்கு, அவர்களின் ஆற்றல், திறன் வளர்ச்;சிக்கு நாம் விசேட கவனம் செலுத்துவோம். எல்லா இளைஞர் யுவதிகளுக்கும் கல்வித் துறையில் வழி தவறுவதற்கு இடமளிக்காது, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி என்பவற்றை கற்பதற்கான வாய்ப்புகளை விஸ்தரிப்பேன். இதற்காக தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மிக குறுகிய காலப் பகுதியில் கட்டியெழுப்புவேன். அதன்மூலம் புதிதாக தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், இளைய தலைமுறையினர் ஊடாக தனியார் தொழில்முயற்சியாளர்களை அதிகமாக உருவாக்குவதற்கும், தேவையான பொருளாதார சூழலை உருவாக்குவதற்கு நாம் எதிர் பார்க்கின்றோம். 

கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாக புத்தாக்கங்களை உருவாக்குவதற்கு எமது இளைய தலைமுறையினறுக்கு ஒத்தாசை வழங்குதல் வேண்டும். எமது நீண்டகால நோக்கமாக இருக்க வேண்டியது யாதெனில், புதிய படைப்புகளின்மூலம் உலகத்தில் முன்னிலையில் உள்ள நாடாக இருத்தலாகும். அபிவிருத்தியில் பாரிய எதிர் நீச்சல் பொருட்டு புதிய உலக செல்நெறிகளை பின்பற்றி தொழில்நுட்பத்தை முதன்மையாகக்கொண்ட எதிர்கால திட்டங்களை நாம் ஒவ்வொரு துறைக்கும் அறிமுகப்படுத்துவோம். எமது பொருளாதார கொள்கையில் உள்நாட்டு வியாபாரங்களை பாதுகாத்து உலகளாவிய பொருளாதாரத்தில் புதிய சந்தை வாய்ப்புகளை கண்றிவதற்கு எதிர்பார்க்கின்றேன். எமது நாட்டு மக்களின் மூன்றில் ஒரு பகுதியினறுக்கு அண்மித்த எண்ணிக்கையினர் இன்றும் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய தொழில்துறைகளின் மீது தங்கியுள்ளனர். 

இந்தக் கைத்தொழிலை மிகப் பயனுள்ளதாக்கி இந்த மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவறத்கு நாம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். மக்கள் நேயத்துடன்கூடிய, வினைத்திறனுடனான அரசாங்க சேவையினை உறுதிப்படுத்தல் அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாகும். அதற்கு முதலாவதாக, அரசாங்க உத்தியோகதர்களை அரசியல் செல்வாக்குகளிலிருந்து விடுவிக்கபபடுதல் வேண்டும். தமது கடமைப் பொறுப்புகளை உரியவாறு நிறைவேற்றுவதற்கு தீர்மானங்களை மேற்கொள்கின்ற, நேர்மையான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தேவையான ஆகக்கூடிய சட்டத்துடனான பாதுகாப்பினை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். 

அதேபோன்று உயர் தரத்திலான சேவையினை மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசாங்க நிறுவனங்களில் ஈ - தொழில்நுட்பம் ஆகக்கூடியதாக பயன்படுத்துவதன்ஊடாக பொது மக்களுக்கு மிக நல்ல வினைத்திறனுடனான சேவையினை வழங்குவேன். அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்கின்ற சேவைகள், இயன்றவரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழங்குவதன்மூலம் ஊழலுக்குள்ள வாய்ப்புகளை குறைப்பேன். 

முறையின்றி உள்ள நகரமயப்படுத்தலானது, தற்காலத்தில் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளது. நாம் இந்தப் பிரச்சினையின் மீது மிகவும் ஆக்கத்திறனுடன் பார்த்தல் வேண்டும். இலங்கையில் எந்தவொரு இடத்திலும் வாழ்வதற்கு பொருத்தமான சூழல் உள்ள நாடாகும். ஆகையால் நாம் நாடு முழுவதும் அபிவிருத்தியினை விரிவுபடுத்தல் வேண்டும். 

வேலை வாய்ப்புகள் மற்றும் வியாபார வாய்ப்புகளை தேடி பொது மக்கள் நகரத்தை நோக்கி வருகின்றனர். அதற்குப் பதிலாக நாம் அந்த வாய்ப்புகளை பொது மக்களிடையே கொண்டுச் செல்லுதல் வேண்டும். நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்தையும் இணைத்துள்ள வீதி முறைமைகளையும் புகையிரத வீதிகளையும் மேம்படுத்துவதற்கு, போக்குவரத்து சேவைகளில் பாரிய முன்னேற்றத்தை கூடிய விரைவில் நாம் கைப்பற்றுதல் வேண்டும். 

நீர், மின்சாரம், மருத்துவமனைகள் போன்ற வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்திலும் மேமப்டுத்துவதன்மூலம், கைத்தொழில் மற்றும் வியாபாரங்கள் நகரத்திற்கு மட்டும் வரையறுக்கப்படாது கிராமத்திற்கு கொண்டுச் செல்வதை முயற்சிக்கலாம். 

நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்திலும் அதிவேக இணையத்தள வசதிகளை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். அப்போது எமது இளைய தலைமுறையினர் வீட்டிலிருந்தே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகத்துடன் கொடுக்கல்வாங்கல் செய்வதற்கும் வியாபாரங்களை மேற்கொள்வதற்கும் முடியுமாகும். 

பெரும்பாலான நடுத்தர வகுப்பு குடும்பங்களுக்கு பிரச்சினையாகவுள்ள, தமக்கே சொந்தமான வீடொன்றின் தேவைக்கு, தீர்வாக முறையானதும் துரிதமானதுமான நிகழ்ச்சித்திட்டமொன்றை, நான் தேசிய மட்டத்தில் அறிமுகப்படுத்துவேன். எதிர்கால தலைமுறையினரின் பொருட்டு சுற்றாடலை பாதுகாத்தல் எம் அனைவரினதும் பொறுப்பாகும். நான் அன்று ஆரம்பிக்கப்பட்ட நகர அலங்கார கருத்திட்டங்கள் மற்றும் பசுமை நகர எண்ணக்கருக்கல் என்பன நாடுபூராகவும் விஸ்தரிப்பதற்கு நாம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம். 

அழிந்துச் செல்லும் எச்சரிகைக்கு உள்ளாகியுள்ள இயற்கை வனங்களை மீண்டும் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். அதேபோன்று அனைத்து தரிசு நிலங்களை பொருத்தமானவாறு பயன்படுத்தி புதிய தேசிய வனச் செய்கை நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துவேன். ஆயிரம் ஆண்டுகளிலான வரலாற்றினைக் கொண்டுள்ள எமது நாடு, எப்போதும் சமயத்திற்கும் தர்மத்திற்கும் ஒத்திசைந்த, பண்பான மக்கள் உள்ள, நல்ல காலாச்சாரத்திற்கும் நெறிமுறைகளுக்கும் பிரசித்திபெற்ற நாடாகும். 

ஆயினும் இன்று வீதயில் செல்கையில், வாகனங்களை ஓட்டும்போது, குப்பை கழிவுகளை அகற்றும்போது, மகளிரை கவனிக்கும் முறை பற்றி அவதானிக்கும்போது இந்த பண்பாடுகளில் வீழ்ச்சி காணப்படுகிறது. ஏனையோர்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் வாழ்தல் எல்லா பிரசைகளினதும் கடமையாகும். மக்கள் எதிர்பார்க்கின்ற அந்த ஒழுக்கமுடைய சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் பணியாற்றுவோம். அதற்கான முன்மாதிரியினை நாட்டின் தலைமைத்துவத்தால் வழங்கப்படுதல் வேண்டும். 

வரலாற்றில் எமது நாடு பிரசித்திபெற்றதுபோல் மகளிர்கு அச்சமின்றி எந்தவொரு இடத்திலும், எந்தவொரு நேரத்திலும் தனியாக பயணிக்க முடியுமானவாறு நாட்டை நாம் கட்டியெழுப்புவோம். பல்வேறு விபத்துகளுக்கு உள்ளாகியுள்ள படை வீரர்கள், சிவில் பிரஜைகள் மற்றும் பிறக்கும்போதே விசேட தேவைகள் உள்ள பிரஜைகளின்மீது நாம் என்றும் விசேட கவனம் செலுத்தினோம். 

எதிர்வருங் காலத்தில் அரச மற்றும் தனியார் துறையின் சேவைகளை வழங்கும்போது அவர்களின் விசேட தேவைகள் தொடர்பாக கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு முதலிடம் வழங்குவதற்கு நாம் பணியாற்றுவோம். எமது நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரம், சுதேச சிந்தனை, தேசத்தின் இறையாண்மை எமக்கு மிகவும் முக்கியமாகும். நாம் எல்லா நாடுகளுடனும் நட்புறவை பேணுவதற்கு தயாராக உள்ளோம். ஆயினும், நாம் எந்தவொரு நாட்டுக்கும் எமது இறையாண்மையை காட்டிhக்கொடுப்பதற்கு தயாராக இருக்கமாட்டோம். ஆகையால் இராஜதந்திர உறவுகளின்போது, எந்தவொரு வெளிநாட்டுக்கும் முன்னே அடிபணியாத, நாட்டின் இறைமையை எப்போதும் பாதுகாக்கம், எந்தவொரு நாட்டுடனும் சம மட்டத்தில் கொடுக்கல்வாங்கல் மேற்கொள்கின்ற, சுதேச முன்னர் நிகழ்ந்த பிழைகளை சரிசெய்துகொள்வோம். அதேபோன்று நாம் பயணிக்கும் பயணத்தில் குறைப்பாடுகளை தேடிப்பார்த்து, துரிதமாக அதனை சரிசெய்துக் கொண்டு எமது நீண்டகால நோக்கத்தின்மீது செல்லுதல் வேண்டும். 

இதற்காக தனிப்பட்ட நோக்கங்களையும் பார்க்க, பொது நோக்கத்துடன் பணியாற்றும், முழுமனதுடன் நாட்டை ஆதரிக்கும், ஆக்கத்திறனுடன்கூடிய, திறமையான, அறிவுடன்கூடிய குழுவினரை எம்முடன் இணைத்துக்கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். எதிர்வருங் காலத்தில் வருகின்ற ஜனாதிபதி தேர்தல் நாட்டுக்கு மிக முக்கியமாகும். அது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும். 

ஆகையால் இத் தருவாயில் எமது நாட்டில் அனைத்து பிள்ளைகளினதும் எதிர்காலம் பொருட்டு கட்சி வேறுபாடின்றி கைகோர்த்துக்கொள்ளும்படி சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பர்கர் ஆகிய அனைத்து இனங்களுக்குரிய நாட்டுப் பற்றுமிக்க மக்களிடமிருந்து நான் கேட்டுக்கொள்கின்றேன். 

இந்த முக்கியமான நாளில் நான் உங்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன். இன்று முதல் நாம் இலங்கை வரலாற்றில் மற்றுமொரு வகையிலான சுதந்திர போராட்டத்தினை தொடங்குகின்றோம். அந்த கௌரவமான நோக்கம் பொருட்டு, மேற்கொள்கின்ற தேர்தல் இயக்கத்தினையும், நாம் மிகவும் கௌரவமான முறையில் மேற்கொள்ளுதல் வேண்டும். ஆகையால் எமது முழுமொத்த தேர்தல் இயக்கத்தினை ஒழுக்கத்துடனும், சட்டத்தை மதிக்கும் வகையிலுமான, தேர்தல் இயக்கமாக பேணிச் செல்லுதல் வேண்டும். 

இந்த தேர்தல் இயக்கத்தில் எப்போதும் சுற்றாடல் பாதுகாப்புக்கு முதலிடம் வழங்குவோம். பொலிதீன் மற்றும் ப்ளாஸ்றிக் உபயோகமற்ற தேர்தல் இயக்கம் ஊடாக ஏனைய அனைத்து கட்சிகளுக்கும் முன்மாதிரியாக திகழ்வோம். அரசியல் எதிரிவாதிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும், தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை மேற்கொள்கின்ற பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றும் தேர்தல் கலாசாரத்தை நாம் மாற்றுவோம். 

நான் உங்களிடம் வேண்டுவது, எமது எதிரிவாதிகளின் பிழையான கருத்துகளுக்கு தர்கரீதியாக, உண்மையாக பதில் அளிக்குமாறு ஆகும். இன்று எமது நாட்டில் வாக்காளர் அரசியல் ரீதியாக நெகிழ்வுத் தன்மை மிக்கவராக உள்ளார். விசேடமாக இன்று நாட்டில் இளைய தலைமுறையினர் மிகவும் அறிவுத் திறன் கொண்டவர்களாக உள்ளார்கள். பொய்யால் உண்மையை வேறுபடுத்தி இனம் காணுவதற்கு அவர்களுக்கு ஆற்றல் உள்ளது. 

எமது நாட்டு மக்களில் சரிபாதி 30 வயதுக்கு குறைந்தவர்களாவார்கள். ஆகையால் எமது நாடு இளம் தலைமுறையினரைக் கொண்ட சனத்தொகையுள்ள நாடாகும். நாம் எல்லோரும் எதிர்பார்ப்பது இந்த எதிர்கால சந்ததியினறுக்கு அபிமானத்துடன் வாழ்வதற்கு முடியுமான சுதந்திரமான, சுபீட்சமான நாட்டினை கட்டியெழுப்புதலாகும். அதற்கு தேவையான நோக்கு எமக்கு உள்ளது. நாம் அதற்கு தேவையான திட்டங்களை தற்போது தயாரித்துள்ளோம். 

இதுவரை பொறுப்பெற்ற எல்லா பொறுப்புகளையும் உயர்ந்த மட்டத்தில் நிறைவேற்றயவாறு இந்த முறையும் உங்கள் அனைவரும் முன்னிலையில் நான் கௌரவத்துடன் கூறுவது, இன்று நாட்டுக்கு தேவையாக உள்ள நீங்கள் அனைவரும் கேட்கும், அந்த தேசிய கடமையினை நிறைவேற்றுவதற்கு நான் தயாராக உள்ளேன்., மும்மணிகளின் ஆசிர்வாதம் கிட்டட்டும்.