தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கு
(மண்டூர் ஷமி)


தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தொடர்பில் தெளிவூட்டும் கூட்டம் திங்கட்கிழமை(12) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்மக்களின் நீண்டகால கேள்விகளாகவும் ஆதங்கங்களையும் மற்றும் அரசியலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் தலைமைகளிடம் நேரடியான கேள்வி-பதில் நிகழ்வும் இந்நிகழ்வில் அனைத்து விதமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் தெளிவுரையினை ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். வழங்கினார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள் பிரசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.