லங்கா சதொச ஓட்டமாவடி கிளையின் ஒரு வருட பூர்த்தியும் Unilever ன் இறுதி வார வெற்றியாளர்களுக்கான பரிசுகள் வழங்கலும்



இலங்கை அரச வர்த்தக நிறுவனமான லங்கா சதொச ஓட்டமாவடி கிளையின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டதான கொண்டாட்டமும், இலங்கையின் முதற்தர வர்த்தக நாமமான Unilever ன் "பரிசு மேல் பரிசு " நிகழ்வும் 2019/08/19 அன்று திங்கட் கிழமை இடம் பெற்றது .

இந் நிகழ்வில லங்கா சதொசயின் பிராந்திய முகாமையாளர் ஜனாப்f முகமட் ஹஸன்அலி மற்றும் லங்கா சதொச ஒட்டமாவடி கிளையின் முகாமையாளர்  பியோசன் வசந்தன் , மற்றும் உதவி முகாமையாளர் , மற்றும் அக்கிளையின் வர்த்தக ஊழியர்கள் ,மட்டக்களப்பு பிராந்திய கொக்கட்டிசோலை, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர் , காத்தான்குடி லங்கா சதொச கிளைகளின் முகாமையாளர்கள் மற்றும் இலங்கையின் முதற்தர வர்த்தக நாமமானUnilever ன் பிராந்திய நிருவாகி   k. குலேந்திரன் , மற்றும் Unilever ன் பிரதிநிதி   வ. கார்த்திக் ஆகியோர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி லங்கா சதொச கிளையின் ஒரு வருட பூர்த்தியை கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த லங்கா சதொசயின் பிரதேச முகாமையாளர் ஜனாப் முகமட் ஹஸன்அலி அவர்கள் கருத்துரைக்கையில் ஓட்டமாவடி பிரதேச மக்களுக்கு ஓட்டமாவடி லங்கா சதொச கிளை சிறந்த சேவையை வழங்கி வருகிறது , அதேபோல் இப்பிரதேச மக்களும் தங்களாலான ஆதரவை இக்கிளையின் வியாபாரவளர்ச்சிக்கு செய்து வருகின்றனர் என்றும் கருத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஓட்டமாவடி லங்கா சதொச கிளையின் முகாமையாளர்  வ. பியோசன் கூறுகையில் இவ்வருடம் Unileverன் (taki pita taki) "பரிசு மேல் பரிசு"இவ்வருடம் இலங்கை முழுவதுமான லங்கா சதொசகிளைகளில் ஓட்டமாவடி கிளை முதல் இடத்தை தக்கவைத்துள்ளது .என்பதுடன் இவ்வருடம் எந்த கிளையிலும் எந்த பிரதேசத்திலும் இல்லாத வகையில் LED TV , குளிர்சாதனபெட்டி , குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் உள்ளிட்டநாற்பத்தியொரு பரிசில்களை பெற்றுள்ளது .என்பதனை பெருமையுடன் தெரிவித்துக்கொள்வதோடு இந்த முதலிடத்தை தக்கவைப்பதற்கு முன்னின்று உழைத்த எமது கிளையின் வியாபார ஊழியர்கள் மற்றும் Unilever ன் பிரதிநிதிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இறுதி வார வெற்றியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.