க.பொ.த உயர்தர 2019 மாணவர்களுக்கான தொழில்நுட்ப பாட செயன்முறைக் கருத்தரங்கு


கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தின் (CTCT) நிதி அனுசரணையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட கல்வி வலயங்களில் இம்முறை உயர்தரப் பரீட்சை (2019) தொழில்நுட்ப பாடங்களுக்கு தோற்றிய மாணவர்களுக்கான செயன்முறைக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இரு தினங்களை கொண்டமைந்த செயன்முறைக் கருத்தரங்கு புரட்டாதி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நடைபெறவுள்ளது.

வடமாகாண கிளிநொச்சி, துணுக்காய், முல்லைத்தீவு, மன்னார் மடு ஆகிய கல்வி வலய மாணவர்களுக்கான செயன்முறைக் கருத்தரங்கை J.J.மைக்கல் அவர்களும். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பு, திருக்கோயில், அக்கரைப்பற்று கல்வி வலய மாணவர்களுக்கான கருத்தரங்கினை M. விஜயராஜ் அவர்களும் ஒழுங்கு செய்து வருகின்றனர்.

ஆடி மாதம் 16,20,21 ஆம் திகதிகளில் கனடிய தமிழர் அறக்கட்டளை நிதியத்தால் முன்னெடுக்கப்பட்ட கருத்தரங்கு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரியில் நடாத்தப்பட்டது. இதில் இம்முறை உயர்தரத்திற்கு தோற்றிய பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றிப் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.