சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்


  • குறைந்த  வாக்குவித்தியாசத்தில்  வெற்றியை தழுவிய ஜனாதிபதி தேர்தல்கள்
  • ஐக்கிய தேசிய கட்சிக்குள் தொடரும் முறுகல்…
  • முடங்கியுள்ள கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம்  
  • அனுரகுமார திஸாநாயக்கவின் செல்வாக்கு 50% புள்ளியை தடுக்குமா
ஆர்.சயனொளிபவன் & TEAM 

நடைபெறவிருக்கும் 8வது ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே  உள்ள வேளையில் சகல ஊடகங்களும் இத் தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.    இம் முறை ஜனாதிபதி தேர்தல் மும்முனைப் போட்டியாக இருக்குமா அல்லது நான்கு பேர் களமிறங்கும் போட்டியாக இருக்குமா  என்ற நிலை இன்று வரை தெரியாத நிலையில் தேர்தலும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வகையில் வெற்றியாளராக வருபவர் அவரோடு போட்டியிடுபவர்களை விட அதிகூடிய வாக்குகளை பெறுபவராகவும்  அத்தோடு அத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் குறைந்தபட்சம்  50% மான   வாக்குகளையாவது  பெறுபவராகவும் இருக்கவேண்டும் . இம் முறை தேர்தல் மும்முனை போட்டியாக அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் களமிறங்கும் தேர்தலாக அமைகின்ற பட்சத்தில் முதல் தேர்தலிலேயே ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே உள்ளது.


நாட்டில் உள்ள சகல இன மக்களையும் பொறுத்த வரையில் வெவ்வேறு காரணங்களுக்காக இத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.  இன்றும் இந்த  நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அதி சக்திவாய்ந்த பதிவியாக திகழ்வதாலும்  மேலும் இந்த நாட்டை பொறுத்த அளவில் இப் பதவிக்கு பெரும்பான்மை சிங்கள சமூகத்தை சேர்ந்த  ஒருவரே ஜனாதிபதியாக வரக்கூடிய 100% சந்தர்ப்பமும் உள்ள வேளையிலும்  சிறுபான்மை சமூகத்தை பொறுத்த அளவில் பல  சந்தர்ப்பங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்துள்ளது. இம் முறையும் அவ்வாறான சந்தர்ப்பம் உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகமாக தென்படுகின்றன.   .



குறைந்த  வாக்குவித்தியாசத்தில்  வெற்றியை தழுவிய ஜனாதிபதி தேர்தல்கள்

ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு இரண்டு முக்கிய அடைவுகளை பெறவேண்டும்
  1. மற்றைய போட்டியாளர்களை விட அதிகப்படியான வாக்குகளை பெறவேண்டும்
  2. தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் ஆகக்குறைந்தது 50% வாக்குகளை பெறவேண்டும்.
எந்தவொரு போட்டியாளரும் குறைந்தபட்சம் 50% பெறாத நிலையில் 3ம் 4ம் ..... இடங்களில் உள்ளவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் வாக்குகளில் இருந்து தமது 2வது தெரிவாக தெரிந்த வாக்குகள் இருக்குமாயின் அவ் வாக்குகளில் முதல் இரு இடங்களில் வருபவர்களில் ஒருவரை தெரிவு செய்திருந்தால் அந்த வாக்குகள் முதல் இரு போட்டியாளர்களுக்கும் முறையே சேர்க்கப்படும். அவ்வாறு சேர்க்கப்பட்டும் முதல் இரு போட்டியாளர்களிலும் வாக்குகள் 50% அடையாத பட்சத்தில் மீள் தேர்தல் நடாத்தப்படல் வேண்டும். 
இத் தேர்தல் முதல் இரண்டு இடங்களை பெறுபவர்களுக்கான தேர்தலாகவே அமையும்

குறிப்பாக மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியாளர்களை தெரிவு செய்த  ஜனாதிபதி  தேர்தல்களாக
  • 2005 ஜனாதிபதி தேர்தலில் போட்டி இட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் அதே தேர்தலில் அவருக்கு எதிராக போட்டியிட்ட தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்காவிற்குமான வாக்குகளின் வித்தியாசம் 180,786    ஆகும்.
  • அதே  போல் 1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி பிரேமதாசாவிற்கும் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கும் இடையேயான வாக்குகள் வித்தியாசம் 279,239 ஆகும்.
  • இதே போன்றுதான் இறுதியாக 2015 இல் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 449,072 ஆகும் 
50% வாக்குகளை - குறைந்த  எண்ணிக்கையான வாக்குகளுடன்  பெற்ற  ஜனாதிபதி தேர்தல்கள் என்ற வகையில் கீழ் வரும்  தேர்தல்கள் இடம் பிடிக்கின்றன 



இந்த வகையில் 2005 யில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி தாம் பெற்ற மொத்த வாக்குகளில் 28,632 வாக்குகளினால் குறைந்திருந்தால் 3, 4,5… இடங்களை பெற்றவர்களின் 2ம் விருப்பு வாக்கு கவனத்தில் எடுத்துகொள்ளப்பட்டிருக்கும் ஆனால் 3,4,5.. இடங்களை அடைந்தவர்கள் மிககுறைவான வாக்குகளை பெற்றதனால் 2005 தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி தாம் பெற்ற வாக்குகளை விட 50,000 அளவிலான வாக்குகளை குறைவாக பெற்றிருந்தால் மீண்டும் ஒரு தேர்தலே இடம்பெற்றிருக்கும். 


மேலும் இம்முறை தேர்தல் மும்முனை தேர்தலாக இருந்தால் சிறுபான்மை சமூகத்தின் வாக்கு வங்கி அதி முக்கியத்துவம் பெறும்  என்பதும் அதே வேளையில் மீள் தேர்தல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாகவும் காணப்படுகின்றது .

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தொடரும் முறுகல்

ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்த அளவில் இக் கட்சியே ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள முக்கிய கட்சியாக விளங்குவது மட்டுமல்லாது ஜனாதிபதி வேட்பாளரும் இக் கட்சியில் இருந்தே களமிறக்கப்படவுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதையும் மேலும் ஐக்கிய தேசியக்கட்சியின் கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சஜித்தீன் பக்கம் இருப்பதையும், அமைச்சர் சஜித் தான் தான் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக களமிறங்கவேண்டும் என்று விடாப்பிடியாக  இருப்பதோடு மட்டுமல்லாது நிலைமை எவ்வாறு இருந்தாலும் தான் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்பது உறுதி என்றும்  அறிக்கைகளை விடுவதையும் தினமும் பார்க்கக்கூடிய ஒரு விடயமாகவும்  உள்ளது.

இவர் இதுவரை பதுளை, மாத்தறை, குருணாகல் ஆகிய பகுதிகளில் நடாத்திய பிரமாண்டமான பொது கூட்டங்களில் பெரும் தொகையான மக்கள் வெள்ளம் கலந்து கொண்டதும் மட்டுமல்லாது அமைச்சர் சஜித்திற்கு நாளா வண்ணம்  ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் மற்றும் பொது மக்கள் மத்தியிலும் ஆதரவு அதிகரித்து வருகின்றது. அமைச்சர் சஜித்தை பொறுத்த அளவில் பிரதமர் ரணிலின் ஆசிர்வாதத்தோடும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவோடும் களமிறங்குவதற்கே முழு பிரயாணத்தையும் மேற்கொடுவருகின்றார். தான் ஜனாதிபதியானால் பிரதமர் ஐக்கியதேசிய முன்னணியில் உள்ள ஒருவருக்கே வழங்கப்படும் என்றும் உறுதி மொழி வழங்கியுள்ளார் .


அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மறுபக்கத்தில் கட்சியின் கூடுதலான முக்கியஸ்தர்கள் சகிதம் தான் எவ்வாறாவது ஜனாதிபதி தேர்தலில் வேட்ப்பாளராக களமிறங்கவேண்டும் என்றும் மேலும் அமைச்சர் சஜித்தை இத் தேர்தலில் களமிறங்காது தடுப்பதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றதா என்ற மந்திர ஆலோசனைகள் நடத்திய வண்ணமே உள்ளார். ஆனால் இதுவரை இவரது முயற்சி வெற்றியளிக்காத வகையிலும் தேர்தலிற்குரிய காலம் நெருங்கிய வண்ணமே உள்ளது . மேலும் பிரதமர் ரணிலின் முயற்சி வெற்றியளிப்பதற்கான சந்தர்ப்பங்களும் குறைந்துகொண்டே வருகின்றது . பிரதமர் ரணிலிற்கு சாதகமான உள்ள ஒரே ஒரு விடயம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியேயாகும். ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரையில் கட்சியின் தலைவரே ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும் அதிகாரத்தை கொண்டுள்ளார் . ஆனால் இந்த விடயத்தை தவிர இவருக்கு சாதகமா எந்தவொரு விடயமும்அமையவில்லை என்றுதான் கூறவேண்டும் .அதாவது
  • ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தோழமை கட்சிகள் சஜித் களமிறங்குவதை விரும்புவதையும்
  • அமைச்சர் சஜித் செல்லும் இடம்கள் எல்லாம் மக்கள் வெள்ளம் திரளுவதையும்
அமைச்சர் சஜித்திற்கு உள்ள செல்வாக்கை தெளிவாக எடுத்து காட்டுகின்றது. மேலும் இந்த கட்டுரை எழுதும் போதும் பிரதமர் ரணிலிற்கும் மற்றும் அமைச்சர் சஜித் திற்கும் இடையே ஒரு இணக்கப்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் தொடர்த்தவண்ணமே உள்ளது. மேலும் முடிவு மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் எட்டப்படும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

முடங்கியுள்ள கோட்டாபாய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம் 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோட்டாபய ராஜபக்ச கடந்த மாதம் ஆகஸ்ட் 11ம் திகதி பொதுஜன பெரமுனையவின் வேட்பாளராக அவர்களது மகாநாட்டில் அறிவித்ததில் இருந்து அவரது தேர்தல் பிரசாரம் மந்த கதியிலயே செல்வதை உணரக்கூடியதாகவும்  உள்ளது, மேலும்
  • கோட்டாபய பொதுஜன பெரமுனையின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததை தொடர்ந்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்து வேறுபாடுகள்
  • முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பொறுத்தளவில் அவரது இறுதியான தெரிவாகவே கோத்தபாய இருந்துள்ளார் என்றும் . மேலும் இவ் வாதத்தை வலுசேர்க்கும் வகையில் கடந்த வருடம் அக்டோபர் 26 இல் ஜனாதிபதி மைத்திரியால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்ற முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இம் முடிவிற்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.
  • கட்சிக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை போல் அன்றி 100% ஆதரவும் இதுவரை கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கருதப்படுகின்றது
  • மிக குறுகிய அளவு செய்தியாளர் மகாநாடுகளை இதுவரை கோட்டாபய ராஜபக்ச அவர்கள் நடாத்தியுள்ளதாகவும் இது அவர் ஊடக துறையில் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுவதாகவும் கருதப்படுகின்றது
  • பொது ஜன முன்னணி மற்றும் பொதுசன பெரமுனை ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்தும் முடிவின்றி தொடரும் பேர்ச்சுவார்தைகள்
இவ்வாறான காரணம்களால் இதுவரை இவருடைய தேர்தல் பிரசாரம் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றாகரமாக செல்லவில்லை என்றும் ஆனால் இவரை பொறுத்தளவில் இவர் ஒரு செயல் வீரரென்றும் மேலும் இவர் வருகின்ற வாரம்களில் தமது கள நிலமையையை மாற்றியமைத்து தேர்தல் பிரசாரம்களை உத்வேகம் பெற செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுரா குமார திஸாநாயக்கவின் செல்வாக்கு 50% புள்ளியை தடுக்குமா

JVP யின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரா குமார திஸ்ஸாநாயக்கவின் காலி முகத்திடலில் கடந்த இரு வாரம்களுக்கு முன்பு பெருமளவு மக்கள் கூட்டத்தின் பிரசன்னத்துடன் ஆரம்பித்த அங்குராப்பண தேர்தல் பிரசார கூட்டத்தை தொடர்ந்து அதற்கு சமமான அளவிலான மக்கள் கூட்டத்தை மற்றைய இடங்களில் இடம்பெற்ற கூட்டம்களில் காணமுடியவில்லை என்றும் கூறப்படுகின்றது . இவரையும் இவரது கட்சியை பொறுத்த அளவில் வெற்றிவாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம்கள் மிக குறைவாக காணப்பட்டாலும் மேலும் அனுரா குமார திஸாநாயக்கவின் கள மிறக்கம் ஒரு முக்கிய விடயத்தை அடைய முயற்சிக்கலாம் என்று கருதப்படுகின்றது அதாவது இவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகளின் மூலம் எந்தவொரு வேட்பாளரும் 50% குறைவான வாக்குகளை பெறக்கூடிய சந்தர்ப்பமே உருவாகும் எனவும் இதன் மூலம் தங்களுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளில் உள்ள இரண்டாம் தெரிவின் மூலம் வருகின்ற ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான துருப்பு சீட்டை தாம் வைத்திருக்கும் நிலையை உருவாக்கலாம் என்றும் கருதப்படுகின்றது .

மேலும் இவர்களுடைய வாக்கு வாங்கி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிவாய்ப்பையே குறைக்கும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது . ஏனேனில் JVPயும் மற்றும் கோத்தபாயவின் பொதுஜன பெறமுனையும் இடதுசாரி சார்பான கொள்கையை கொண்டுள்ளதாலும் மேலும் இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் சிங்கள கிராமபுரத்தை மையமாக கொடுள்ளதாலும் JVPயினரின் செல்வாக்கு கோட்டாவின் வாக்குவங்கியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பொதுவாக கருதப்படுகின்றது 



ஜனாதிபதி தேர்தல் முறை ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து கடந்த தேர்தல் வரை 7 முறை ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்று இருக்கின்றது .இந்த 7 தேர்தல்களும் இருமுனை போட்டியாகவும் மற்றும் குறித்த 7 தேர்தல்களிலும் வெற்றிபெற்ற அனைத்து போர்ட்டியாளர்களும் அளிக்கப்பட மொத்த செல்லுபடியான வாக்குகளில் 50% ற்கு அதிகமான வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

ஆனால் இம்முறை தேர்தலானது முன்னர் இடம்பெற்ற 7 ஜனாதிபதி தேர்தல்கள் போல் அல்லாது கூடுதலான வாக்குகளை பெற்று 1 வது இடத்தை பெறும்  போட்டியாளர் ஆகக்குறைந்தது 50% அளவிலான வாக்குகளை பெறுவார் என்பது தற்போதைய கள நிலவரங்களை வைத்து பார்க்கும் போது ஐயமாகவேயுள்ளது. தேர்தலில் பிரதமர் ரணில், அமைச்சர் சஜித், முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோட்டாபய ராஜபக்ச மற்றும் JVPயின் தலைவர் அனுரா குமார திசாநாயக்க ஆகிய நால்வரும் போட்டியிடும் பட்சத்தில் மறு தேர்தலிற்குரிய சந்தர்ப்பமே  அதிகமாக காணப்படுகின்றது. இவ்வாறு வருகின்ற வது ஜனாதிபதி தேர்தலுக்கான கள நிலைமைகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது

ஆர்.சயனொளிபவன் & TEAM 
BATTINEWS.COM