19 வருடங்களின் பின்னர் அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிசேகம்

 வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய புனராவர்த்தன ஏக குண்ட பட்ஷ மகா கும்பாபிசேகம் 19 வருடங்களின் பின்னர் இன்று (05) பெருந்திரளானஅடியவர்களுக்கு சிறப்பாக நடைபெற்றது

வங்கக்கடலோரம் அமர்ந்து இஷ்ட சித்திகளை வாரி வழங்கும் ஸ்ரீ நாகதம்பிரான் மற்றும் விநாயகப்பெருமான் கோபாலர் வைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் ஆவணித் திங்கள் 19ஆம் நாள் (05) சுபநேரம்  காலை 10.56 தொடக்கம் 11.38 வரையுள்ள சுபமுகூர்த்தத்தில் மகாகும்பாபிசேகம் இடம்பெற்றது.


கடந்த 03ஆம் திகதி கர்மாரம்ப கிரியைகளோடு ஆரம்பமான கும்பாபிசேக பெருவிழாவானது 04ஆம் திகதி இடம்பெற்ற எண்ணெய் காப்பு சாத்துகின்ற கிரியை மற்றும் வழிபாடுகளோடும் இன்று (05) இடம்பெற்ற கும்பாபிசேக குடமுழுக்குடனும் 16ஆம் திகதிவரை இடம்பெறுகின்ற மண்டலாபிசேக பூஜை 17ஆம் திகதி இடம்பெறும் சங்காபிசேகம் 18ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடனும்; நிறைவுறுகின்றது.

நேற்று காலை பக்தர்கள் எண்ணெய் காப்பு சாந்தும் கிரியைகளில் கலந்து கொண்டதுடன்

இன்று காலை இடம்பெற்ற பிரதான கும்ப யாகபூஜை நடைபெற்ற பூஜையை தொடர்ந்து குடமுழக்கு இடம்பெற்றது.

பின்னர் பிரதான கும்ப உள்வீதி உலா நடைபெற்றதுடன் பிரதான கும்பம் மூலமூர்த்தவர் மீது சொரியப்பட்டது.

நிறைவாக சுவாமி தரிசனம் நடைபெற்றதுடன்  பக்தர்களுக்கு பிரசாதவழங்கப்பட்டதுடன் கும்பாபிசேம் நிறைவுற்றது.

கும்பாபிசேககிரியைகளை சித்தாந்த ஞானபானு. ஆகம பிருவீணா சிவஸ்ரீ க.கு சீதாராம் குருக்களின் தலைமையில் வாமதேவ சிவாச்சாரியார்சிவஸ்ரீ கௌரி சங்கர் சர்மா குருக்கள் உள்ளிட்ட குருமார்கள்; நடாத்தி வைத்தனர்.