கிழக்கு மாகாணத்தில் இவ்வருட இறுதிக்குள் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திக்கப்படும் - கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் இவ்வருட இறுதிக்குள் ஆசிரியர் பற்றாக்குறை அனைத்தும் நிவர்த்திக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.

ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (10) இடம்பெற்ற போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் எச். என். டி மட்டுமல்லாது பட்டதாரிகள் அதேபோல் உயர் தரத்தில் சித்தி அடைந்தவர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்கி நடக்கும் ஆண்டு ஆசிரியர் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை இந்த வருடத்தில் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை இப் பாடசாலைக்கு வருகை தந்த போது அதிக அளவிலான பெண் பிள்ளைகளைக் கண்டு நான் சந்தோசம் அடைகின்றேன். அதே நேரம் எனது பிள்ளைகளின் ஞாபகம் எனக்கு வந்தது நான் எப்போதும் கல்வி அபிவிருத்தியில் அக்கறையான இருக்கின்றேன்.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதுடன் கல்வியில் பாரிய முன்னேற்றம் அடைவதற்கு உரிய ஏற்பாடுகளையும் செய்வேன் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் எம் எஸ் சுபைர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.