கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள வருடாந்த இடமாற்றம்

2020ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான வருடாந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எஸ்.அருள்குமரன், நேற்று  (04) தெரிவித்தார்.

இது தொடர்பான விவரம் அடங்கிய சுற்றுநிரூபம், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இடமாற்ற விண்ணப்பங்களை, செம்டெம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 25ஆம் திகதி இடமாற்ற மேன்முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன், நவம்பர் 29ஆம் திகதி மேன் முறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.

வருடாந்த இடமாற்றத்தின் பொழுது காலம் கணிக்கப்படுவது முன்னைய வருடத்தின் டிசெம்பர் 31ஆம் திகதி வரையாகும். அதற்கமைய உத்தியோகத்தர் இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் போது, தமது சேவை நிலையத்தில் தொடர்ச்சியாக 02 வருடங்கள் சேவையாற்றியிருந்தால் இடமாற்றத்தின் பொருட்டு, விண்ணப்பிப்பதற்கான தகுதியுடையவராவர்.

இதேவேளை, பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், மத்திய குழு உறுப்பினர்களை இடமாற்றம் செய்வதாயின் தொழிற்சங்கச் செயலாளரின் சிபாரிசு கவனத்தில் கொள்ளப்படும். இது தொடர்பான விவரங்களையும் தொழிற்சங்கங்கள், செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.