மட்டக்களப்பில் நவீன சௌகரியமான சொர்ணம் நகை மாளிகை காட்சியறை திறப்பு

கிழக்கு மாகாண வாடிக்கையாளர்களின் வசதி கருதி நவீன தொழில்நுட்ப மற்றும்; மின்னுயர்த்தி வசதியுடன் இரு மாடிகள் கொண்ட சௌகரியமான சொர்ணம் நகை மாளிகை காட்சியறை மட்டக்களப்பு புனித அந்தோனியர் வீதியில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனினால் இன்று (16) திறந்து வைக்கப்பட்டது.

சொர்ணம் குழுமங்களின் அதிபர் முத்துப்பின்ளை விஸ்வநாதன் கருத்துத் தெரிவிக்கையில் மக்களின் கோரிக்கைகளுக்கிணங்க கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நகை வியாபாரத்தில் பொன்விழாவை விரைவில் கொண்டாடவுள்ளோம்.
பரம்பரையாக நகைத்தொழிலை செய்து வந்த நிலையிலே இவ்வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டபோது  இறைவனின் ஆசீர்வாதத்தோடும் மற்றும் வாடிக்ககையாளரின் மனமுவர்ந்த ஒத்துழைப்போடும் வியாபார போட்டிகளுக்கு மத்தியில் பாரிய அர்ப்பணிப்ணிப்பின் பயனாக இந்நிலையை அடைந்துள்ளோம். இத்தனைக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அன்பான வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் மனமுவர்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகுணகலாமதி விஸ்வநாதன், தொழிலதிபர் விஸ்வநாதன் பிரதீப், லயன் எம்.குபேரலிங்கம், மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்தியகக் கலாநிதி விவேகானந்தராஜா, பியூசர் மைன்ட் கின்டர் காடன் பணிப்பாளர் வி.மனோகரன் உள்ளிட்ட வாடிக்கையாளாகள் கலந்து கொண்டனர்.