மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் மரணம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று  (வெள்ளிக்கிழமை) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 27வயதுடைய வாழைச்சேனை, சுங்காங்கேணியை சேர்ந்த ரி.கமல்ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் வாழைச்சேனையில் இடம்பெற்ற கைகலப்பு ஒன்றிற்காக, வாழைச்சேனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றம் ஊடாக குறித்த இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து எந்ததொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை