மட்டக்களப்பில் தனியார் பேரூந்து நிலைய புதிய கட்டிட திறப்பு


மட்டக்களப்பு நகரிலில் ஆறரை கோடி ரூபா செலவில் தனியார் பேரூந்து நிலைய புதிய கட்டிடதொகுதி இன்று(12)காலை 10.00 மணியளவில் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சுபவேளையில் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தும் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் விசேட திட்டத்திற்கமைய மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு நகரிலில் சுமார் 68 இலட்சம் ரூபா செலவில் நிருமாணிக்கப்பட்ட தனியார் பேரூந்து நிலையத்தின் புதிய கட்டிடதொகுதி இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.

இதுவரை காலமும் வசதிகளின்றி பல்வேறு அசௌகாரியங்களுக்கு மத்தியில் செயல்பட்டுவந்த இத்தனியார் பேரூந்து நிலையத்தின் தேவை உணரப்பட்டு பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்த விசேட பணிப்புரைக்கமைய மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின்அங்கீகாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் புதிய கட்டிடதொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சின் செயலாளர்,மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார்,மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்,
திணைக்களத்தலைவர்கள்,மதத்தலைவர்கள்,ஐக்கிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.