நீரலை சறுக்கல் பயிற்சி மற்றும் அடிப்படை நீச்சல் பயிற்சியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கல்



-NR -

Skills for Inclusive Growth (S4IG) இன் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் திட்டமானது ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், திறன் விருத்தி மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சின் (MSDVT) வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத் திட்டமானது, மாகாண மற்றும் மாவட்ட அளவிலான அரசாங்க அமைப்புக்கள், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அமைப்புக்கள் உள்ளடங்கிய மற்றும் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாகப் இணைந்து செயற்படுத்தி வருகின்றது. இது அம்பாறை உள்ளடங்கலாக நான்கு மாவட்டங்களில் மட்டக்களப்பு, திருகோணமலை, பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் S4IG தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.



இதன் அடிப்படையில் S4IG ஆனது சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளிலான திறன் இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இனம் காணப்பட்ட ஆண்களுக்கான நீரலை சறுக்கல் பயிற்சியும், பெண்களுக்கான அடிப்படை  நீச்சல் பயிற்சி மற்றும் நீரலை சறுக்கல் தொடர்பான பயிற்சிநெறியானது நடைபெற்றது. இப் பயிற்சி நெறியில் பங்குபற்றி இதனை வெற்றிகரமாக  பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2019 செப்டம்பர் 19ம்  திகதி வியாழக்கிழமை நேற்றையதினம் பொத்துவில் அறுகம்பை கடற்கரையில் நடைபெற்றது.

இதற்கு அமைய இப் பயிற்சிநெறியினை வெற்றிகரமாக முடித்த 28 நீரலை சறுக்கல் ஆண் பயிற்றுவிப்பாளர்களுக்கும் மற்றும் 09  நீச்சல் திறன் முதலாம் நிலைக்கான (Level -01), நீரலை சறுக்கல் பெண் பயிற்றுவிப்பாளர்களுக்கும் அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது மேலும் இச் சான்றிதழ்களை பெற்றவர்கள் சர்வதேச நீரலை சறுக்கல் சங்கத்தால் தகுதி பெற்றவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் ஆண்கள் நீரலை சறுக்கல்(சர்ஃபிங்) பயிற்றுவிப்பாளரின் தொழில்நுட்ப திறன்கள், நீர்வாழ் முதலுதவி மற்றும் அவசரகால பதில் மற்றும் கடற்கரை உயிர் காக்கும் பயிற்சி குறித்த தொழில்நுட்ப பயிற்சியை முடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விழாவில் பிரதம விருந்தினராக ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்  டேவிட் ஹோலி அவர்கள் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு  அதிதிகளாக  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் A .M .அப்துல்  லத்தீப்,  முதல் உதவி செயலாளர் தெற்கு மற்றும் மேற்கு ஆசியா பிரிவு - DAFT டாக்டர் லாச்லன் ஸ்ட்ராஹான்,  DAFTஇன் மேம்பாட்டு உதவி ஆலோசகர் டாக்டர் தாமஸ் டேவிஸ்  மற்றும் S4IG குழுத் தலைவர் திரு. டேவிட் ஆப்லெட், பொத்துவில் உதவி பிரதேச செயலாளர் M .A C அகமட் நசீல், S4IGன் அம்பாறை மாவட்ட முகாமையாளர்  உ.லே.சம்சுதீன், சுற்றுலாத்துறை சார் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.