பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர் விநியோக மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது வாய்மூலம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை. வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கொள்கைக்கு  உடன் படுகின்றேன் என்றும் அதனடிப்படையிலே இந்த பெயர் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது என்றும்  நீர்வழங்கல் நகர திட்டமிடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அனைத்துப் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களது கோரிக்கைகள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு தற்போது என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளது? என்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் அல்லாத ஏனைய பணிகளுக்கென வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன? எனவும் கேள்வி எழுப்பியதுடன் தனது குறித்த கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் எனவும் சுட்டிக்காட்டினார்.

நீர் விநியோகம் மற்றும் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளிக்கையில் இன்றைய தினம் நீர் விநியோகம் மறறும் வடிகால் அமைப்பு சபைக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்படும் நேர்முகப்பரீட்சை சட்ட ரீதியாகும் என்றும் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.