கன மழையால் பொதுமக்களுக்கு ஆபத்து: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

பெய்துவரும் கனமழைக் காரணமாக, தொற்றுநோய் பரவுவதற்கான அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள், முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித கீகனகே கூறுகையில்,

“இவ்வாறான நோய்களைத் தவிர்த்துக்கொள்வதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் கொதிக்க வைக்கப்பட்ட நீரைப் பருகுதல், மரக்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி உண்ணுதல், உணவுப் பொருட்களை மூடி வைத்தல் உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்.

மேலும், மழைக் காலங்களில் நனைவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.