கல்லடி மாரியம்மன் கோயில் குறுக்கு வீதிகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்



மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லடி மாரியம்மன் கோயில் குறுக்கு வீதிகளை கம்பெரெலிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொங்றிட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் தற்போது நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கம்பெறலிய துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் 3.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ளன.

கல்லடி சனசமுக நிலையத்தினருடன் இணைந்து மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர் மதன் துரைசிங்கம், மாநகர பொறியிலாளர் திருமதி.சித்திராதேவி லிங்கேஸ்வரன், கல்லடிப் பகுதிக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் வனஜா ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.