நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் நடைமுறையில் உள்ள கல்வி முறைமையை சீர்திருத்த வேண்டும்

நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் நடைமுறையில் உள்ள கல்வி முறைமையை சீர்திருத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


இரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

மஹிந்த தேரரின் வருகையினால் இலங்கைக்கு சிறந்த கல்வி முறை கிடைத்தாகவும், நாட்டில் மிகச் சிறந்த மனித வளம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியை வழங்குவது அவசியம் எனவும், அதற்காக பல்வேறு சீர்திருத்தங்களை நாட்டில் ஏற்படுத்த எதிர்பார்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.