வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு மட்டக்களப்பு பொலிஸார் வேண்டுகோள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள வயோதிபரின் சடலத்தை இன்னாரென அடையாளம் காண உதவுமாறு மட்டக்களப்பு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.


சுமார் 65 வயது மதிக்கத்தக்க இந்த வயோதிபர் கடந்த 04.09.2019 அன்று மட்டக்களப்பு  அரசடி மணிக்கூட்டுக் கோபுரத்தினடியில் மயங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பயனின்றி மரணமாகியுள்ளார்.

வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்

அவரைப் பற்றிய தகவலறிந்தோர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் 0652224422 என்ற தொலைபேசி இலக்கத்துடன்  தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்