ஒக்டோபர் 15 – 25 க்குள் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடைபெறலாம்: மைத்திரிக்கு அவசர கடிதம்

ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி மற்றும் 25 ஆம் திகத்திற்குள் தாக்குதல் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளமையினால் பாதுகாப்பு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கத்தோலிக்க திருத்தலங்களுக்கு பாதுகாப்பு குறித்த இந்த அறிக்கைகள் காரணமாக பக்தர்கள் மற்றும் இதுபோன்ற இடங்களுக்கு வரும் மற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரியே இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதல்கள் குறித்து உளவுத்துறையிடம் இருந்து எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்தோடு தாக்குதல் நடத்தப்படும் என வெளியான கடிதங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.