கோத்தாவின் வெற்றியை தடுப்பாரா சஜித் ?


ஆர்.சயனொளிபவன் & TEAM 
  • கடந்த இரு தேர்தல்களில் கட்சிகளுக்கிடையே வழங்கப்பட்ட வாக்குகள்
  • பொதுஜன பெரமுனையின் வாக்கு வங்கியின் உருவாக்கம்
  • கோத்தாபாயவிற்கு சாதகமாக முடிந்த எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
  • மக்கள் வெள்ளமாக அமையும் சஜித்தின்   தேர்தல் பிரசார கூட்டங்கள் 
  • சஜித்தின்   வெற்றிவாய்ப்பு 
  • கோத்தபாயவின்   வெற்றிவாய்ப்பு
வது ஜனாதிபதி தேர்தலின்  பிரசாரத்திற்கான காலப்பகுதி இன்றிலிருந்து சரியாக நான்கு வாரங்கள்  உள்ள வேளையில் இத் தேர்தலில் மொத்தமாக    35 போட்டியாளர்கள் களமிறங்கி இருந்தாலும் இவர்களில் மூன்று வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெறுவார்கள் என்றும்  ஆனால்  மிகவும் உக்கிரமான போட்டி பொதுஜன பெரமுனையின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையேயே நிலவும் எனவும் கருதப்படுகின்றது . இவ் இரு  போட்டியாளர்கலும் தமது பிரசாரங்களை கடந்தவாரம் ஆரம்பித்து தற்போது நாட்டின் பல பாகங்களிழும் நடத்தி வருகின்றனர்.கடந்த இரு தேர்தல்களில் கட்சிகளுக்கிடையே வழங்கப்பட்ட வாக்குகள் 

கடந்த  இரு தேர்தல்களான 2015யில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் மற்றும் 2018யில்  இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலிலும் எவ்வாறு மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்றும் குறிப்பாக  2018யில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தல் களத்தில் இறங்கிய  பொதுஜன பெரமுன  தமது முதலாவது கன்னி தேர்தலிலே எவ்வாறு பெரும் தொகையான வாக்குகளை தம்வசப்படுத்தினர்   என்று பார்போமாயின் 

                                                             
2015 இல் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அண்ணளவாக இரு கட்சிகளும் ஒரு கோடி (1,00,00,000) அளவிலான வாக்குகளையும்  மற்றும் 2018 இல் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலிலும்    முக்கிய மூன்று கட்சிகளிற்கும் இடையேயே  அதே  ஒரு கோடி  (1,00,00,000) அளவிலான  வாக்குகளே   அளிக்கப்பட்டும் உள்ளது. மேலும் 2015 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் சுதந்திர முன்னணி ஆகிய இரு கட்சிகளும் பெற்ற வாக்குகள் எவ்வாறு 2018 இல் தேசிய ரீதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் மூன்றாவது அணியாக களமிறங்கிய பொதுஜன பெமுனையவிற்கு வழங்கப்பட்டு அக்கட்சியானது  முதலாவது இடத்தை பெற்றுள்ளது என்பதையும்  பார்ப்போமாயின்:

பொதுஜன பெரமுனையின் வாக்கு வங்கியின் உருவாக்கம் 


           
ஐக்கிய தேசிய முன்னணி: (ஐ தே மு):- 2015 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 51 இலட்சம் அளவிலான வாக்குகளை பெற்ற ஐ தே மு  2018யில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் 35 இலட்சம் வரையிலான வாக்குகளையே  பெற்று 2ம் நிலைக்கும் தள்ளப்பட்டும் உள்ளது . மேலும்   ஐ தே மு 2018யில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் 16 இலட்சம் அளவிலான வாக்குகளை இழந்தது மட்டுமல்லாது அவ்வாறு  இழந்த  வாக்குகளில் மிக மிக கூடுதலான விகிதம் பொதுஜன பெரமுனைவிற்கே   சென்றடைந்து உள்ளதும்  தெளிவாக தெரிகின்றது.

சுதந்திர முன்னணி: சுதந்திர முன்னணியை பொறுத்த அளவில் அவர்கள் 2015யில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 47 இலட்சம் அளவிலான வாக்குகளை பெற்றும் மற்றும் 2018யில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் 15 இலட்சம் அளவிலான வாக்குகளை மட்டுமே பெற்று பாரிய  தோல்வியையும் தழுவியுள்ளது . குறிப்பாக இக் கட்சியானது தமது வாக்கு வங்கியில் 32 இலட்சம் அளவிலான வாக்குகளை நேரடியாக மகிந்தவின் பொதுஜன பெரமுனைக்கு இழந்தும் உள்ளது.

பொதுஜன பெரமுனைய: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களால் உருவாக்கப்பட்ட இக் கட்சியானது முதல் முறையாகவே நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேர்தலில் களமிறங்கி  முதலாவது இடத்தை பெற்றது மட்டுமல்லாது பாரிய வாக்கு வித்தியாசத்திலும் இந்த  வெற்றியை அடைந்துள்ளது. மேலும் இவர்களது வாக்கு வங்கியானது சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய இரு ஆளும் தரப்பு கட்சிகளினிடமும்   இருந்து 48 இலட்சம் அளவிலான வாக்குகளையும், மற்றும் 2015 பாராளுமன்றத்தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்கு விகிதமான  77.66% விட 2018 உள்ளுராட்சி தேர்தலில் 79.94% அளவிலான வாக்குகள் அளிக்கப்பட்டதன் மூலம்  2015 பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டுப்  பார்க்கும் போது  2018 உள்ளுராட்சி தேர்தலில்  (2%*150,0003 இலட்சம் அளவிலான மேலதிக வாக்குகள் அளிக்கப்படும் அவ்வாறு  அதிகமாக அளிக்கப்பட வாக்குகளில்  2 இலட்சத்தையும் பெற்று மொத்தமாக 50 இலட்சம் வாக்குகளை தம்வசப்படுத்தியும் உள்ளனர் .

கோத்தாபாயாவிற்கு  சாதகமாக முடிந்த எல்பிட்டிய  பிரதேச சபை தேர்தல் முடிவுகள் 

ஆரம்பக்கணிப்புகளின் படி வேட்பாளர் கோத்தபாய முன்னணியில் உள்ளார் என்று கருதபட்டவேளையில் மேலும் அவருக்கு  சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை 11ம் திகதி  காலி மாவட்டத்தில் உள்ள எல்பிட்டிய பிரதேசத்தில்  இடம்பெற்ற பிரதேசசபையின் தேர்தல் முடிவுகளும் இந்த ஊகத்தை உறுதிசெய்யும் வகையிலும் அமைந்துள்ளது . மொத்தமாக 27 பிரதேச உறுப்பினர்களையும் 17 வட்டாரங்களையும் கொண்ட பிரதேசசபையில் 17 வட்டாரங்களையும் கோத்தாபாயா ராஜபக்சவின்   பொதுஜன பெரமுன கைப்பற்றியது மட்டுமல்லாது அளிக்கப்பட வாக்குகளில் 56% அளவிலான வாக்குகளையும் தம்வசப்படுத்தியுள்ளது. மேலும் இதே தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி போட்டியிட்ட 17 வட்டாரங்களிலும் தோல்வியை தழுவியதோடு மட்டுமல்லாது அளிக்கப்பட வாக்குகளில்   24% அளவிலான வாக்குகளையே பெறமுடிந்தது. ஆனால்  தனி சிங்கள மக்களை சனத்தொகையாக கொண்ட ஒரு மிக சிறிய பிரதேசசபையின் முடிவானது  தேசிய ரீதியில்  ஜனாதிபதி தேர்தலின் முடிவை பிரதிபலிக்குமா என்பதே  முக்கிய கேள்வியாகவும்   உள்ளது .


மக்கள் வெள்ளமாக அமையும் சஜித்த்தின்  தேர்தல் பிரசார கூட்டங்கள் 


அடுத்த முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை பொறுத்தளவில் அவர்கள் செல்லுமிடங்கள் எல்லாம் மக்கள் வெள்ளமாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் அவர் தனது முதல் கட்ட பிரசாரத்தை ஆரம்பத்தில் உத்தியோகபூர்வமற்ற முறையில் தனது வேட்பாளர்  நியமனத்தை ஐக்கிய தேசிய முன்னணிக்குள் உறுதிசெய்யும் வகையில் பதுளை, மாத்தறை, குருணாகளை, அவிசாவளை ஆகிய இடம்களில்  நடாத்திய  பொதுக்கூட்டம்களில் பெருமளவு மக்கள் தொகையினர் கலந்தும் கொண்டனர்.

கடந்த வியாழக்கிழமை 10ம் திகதி காலிமுகத்திடலில் நடத்திய தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு காலிமுகத்திடலே என்றும் பார்த்திராத   அளவு பெரும் திரளான மக்கள் பல இலட்சங்களாக   கலந்து கொண்டது யாவரையும் வியக்கவும் வைத்துள்ளது. மேலும் அந்த மேடையிலயே  சிங்கள மக்களை தம் வசம் வைத்து கொள்வதற்கான ஒரு முயற்சியாக  தான் ஜனாதிபதியினால் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களே தனது ஆட்சியில் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பார் என்ற உறுதிமொழியும் சஜித் பிரேமதாசவாழ் வழங்கப்பட்டது.    சஜித் பிரேமதாசவை    பொறுத்த அளவில் இவரது பொதுக்கூட்டங்களுக்கு பெரும் திரளான மக்கள் கலந்து கொள்வதாகவும் மேலும் இவரால் இம் மக்கள் தொகையை  வாக்குகளாக மாற்றமுடியுமா  என்பதே  கேள்வியாகவும்  உள்ளது .


சஜித்தின் வெற்றிவாய்ப்பு 

வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை பொறுத்தளவில் ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து பொதுஜன பெரமுனையவிற்கு சென்றதாக கருதப்படும் 16 இலட்சம் அளவிலான வாக்கு வாங்கியை மீள ஐக்கிய தேசிய முன்னணியிற்கு கொண்டு வருவதில்லேயே அவரது தேர்தலின் வெற்றியும் தங்கியுள்ளது. அதிலும்   சஜித் பிரேமதாசா அவர்களால்  இவ்வாறு  ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து பொதுஜன பெரமுனையாவிற்கு சென்ற வாக்கு வங்கியில் குறைந்த பட்சமாக 60% அளவிலான வாக்குகளை அதாவது 10 இலட்சம் அளவிலான வாக்குகளை மீள  பெறுகின்ற பட்சத்திலேயே சஜித் பிரேமதாசாவால் கோத்தபாயா ராஜபக்ச அவர்களின் வெற்றியை தடுக்கும் முதல் படியாகவும் அமையும் .

மேலும் ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து பொதுஜன பெரமுனையாவிற்கு சென்றதாக கருதப்படும் 16 இலட்சம் அளவிலான வாக்குகளும் பெரும்பாண்மை இன சிங்கள மக்களுடையதாகவும் கருதப்படுகின்றது.  அந்தவகையில் சஜித் பிரேமதாசாவால் 10 இலட்சம் அளவிலான சிங்கள மக்களின் வாக்குவங்கியை ராஜபக்ச தரப்பினரிடம் இருந்து மீண்டும் பெறுகின்ற பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கியானது 45 இலட்சம்களாகவும் உயர்வடையும் என்றும் மேலும் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியாக  கருதப்படும் 30 இலட்சம் அளவிலாக   வாக்குவங்கியில் மிக கூடுதலான வாக்குகளை தமது பக்கம் ஈர்க்க வைக்கும் முயற்சியே     அவரது  வெற்றிவாய்பை   தக்கவைக்கும் இரண்டாவது படியாகவும் அமையும் .


கோத்தபாயவின் வெற்றி வாய்ப்பு 


வேட்ப்பாளர் கோத்தபாயா ராஜபக்சவை பொறுத்தளவில் தம்மிடமுள்ள தற்போதைய வாக்குவங்கியான 50 இலட்சத்தையும் தக்கவைத்து கொள்வதோடு மேலும் சுதந்திர கட்சியின் வாக்கு வங்கியானா  15 இலட்சத்தில் 80% அளவிலான வாக்குவங்கியை தம்வசபடுத்துவது மட்டுமல்லாது  மேலும் சிறுபான்மை  சமூகத்தின் மாற்று தலைமைகளை தங்களோடு இணைப்பதன்  மூலமும் அந்தவகையில் கடந்த ஒரு வார  பகுதியில் குறிப்பாக ஆறுமுகம் தொண்டமானின் இலங்கை தோட்ட தொழிலாளர்  காங்கிரசையும், கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் ( பிள்ளையானின் ) தமிழ் மக்கள் விடுதலை புலிகளையும்  தம்வசப்படுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை பெயர் குறிப்பிட கூடிய வகையில்  முஸ்லீம்  சமூகத்தை சேர்ந்த மாற்று தலைமைகளை  தம்முடன் இணைக்கும்   முயற்சி இதுவரை பாரிய அளவில் இடம்பெறவில்லை என்றுதான் குறிப்பிட வேண்டும்.


கடந்த வாரம் சுதந்திர கட்சியானது பொதுஜன பெரமுனையவுடன் கூட்டு  ஒப்பந்தம் ஒன்றில்  கைச்சாத்திட்டதோடு மேலும் பெரும்பாலான சிரேஷ்ட சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனையவின் ஜனாதிபதி  வேட்பாளர் கோத்தபாயா ராஜபக்சவிற்கு தமது முழு ஆதரவை தெரிவித்து அவரது தேர்தல் பிரசாரத்திலும் கலந்தும் கொண்டுள்ளனர் அந்தவகையில் சுதந்திர கட்சியின் செயலாளர் துமிந்த சில்வா உட்பட பல சுதந்திர கட்சியின் பிரமுகர்கள் கோத்தபாயா ராஜபக்ஷ அவர்களின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற போது  அக்கூட்டத்தில்  பிரசன்னமாகி  இருந்து  தமது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளனர் .


அதேவேளை  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் நிலைப்பாடானது ஒரு குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை  கோத்தபாயா ராஜபக்ச அவர்களுக்கு   ஏற்படுத்தாவிட்டாலும் ஒரு சிறிய அளவிலான எதிர்மறையான தாக்கத்தையாவது அவருக்கு  ஏற்படுத்தலாம், அதே போல் ஜனாதிபதி மைத்திரியின்    நடுநிலையாக இருப்பது என்ற   அவரின்   தற்போதைய நிலைப்பாடாலும் , மேலும் நாடளாவிய ரீதியில் அமைப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் என இதுவரை  40 ற்கும் அதிகமான சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசாவுடன் இணைந்தது மேலும் இவை யாவற்றையும் சேர்த்து பார்க்கும் போது  வேட்ப்பாளர் கோத்தபாயா ராஜபக்ச அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு சுதந்திர கட்சியின் ஒட்டு  மொத்த வாக்கு வங்கியையும் அவர்பக்கம் சாயும் என்பதும்  சற்று ஐயமாகவே  உள்ளது .

கடந்த வாரம்  காலி மாவட்டத்தில் உள்ள  எல்பிட்டிய  பிரதேசசபை முடிவுகள் வேட்ப்பாளர் கோத்தபாயா ராஜபக்சவிற்கும்  அவரது குழுவினருக்கும் ஒரு பாரிய வெற்றியாக   இருந்தாலும் ஜனதிபதி  தேர்தலின் வெற்றியென்பது பல அனுமானம்களில் தங்கியுள்ளதாலும் குறிப்பாக  தமது தற்போதைய வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்ளுதல்,  சுதந்திர கட்சியின் வாக்கு வங்கியில் இருந்து தமக்கு அளிக்கப்படவுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை , சிறுபான்மை சமுகத்திலிருந்து தம்முடன் இணையும் மாற்று அரசியல் தலைமைகளின் வாக்கு வங்கியின் அளவு போன்ற விடயம்களில்   தெளிவற்ற தன்மை காணப்படுவதனால் வருகின்ற ஜனாதிபதி  தேர்தலில் வாக்குகள் அளிக்கப்பட்டு அவை எண்ணப்படும் வரை வெற்றியாளர் யார் என்பது தெரியாத  ஒரு தன்மையே  தற்போதுள்ள கள நிலவரம்களின் படி தென்படுகின்றது.

சஜித் பிரேமதாசாவிற்கு  எல்பிட்டிய பிரதேசசபை முடிவுகள் சாதகமான அமையா  விட்டாலும் அவரை பொருத்தளவில் அவர் ஓரு இளம் மற்றும் நாட்டில்   உள்ள சகல இன மற்றும் வகுப்பு மக்களையும் இணைக்கக்கூடிய   புதிய தலைவராகவும், ஐக்கிய தேசிய கட்சியிற்கு மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியிற்கும் அவருக்கும் நேரடித்தொடர்புகள் இல்லை என்பதாலும் மேலும் அவர் அமைச்சராக இருந்து பாமர மக்களுக்கு ஆற்றிய சேவையாலும்  ஐக்கிய தேசிய முன்னணியின் வாக்கு வாங்கியாக  இருந்து  2018யில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுனையவிற்கு சென்றதாக கருதப்படும்   தமது   பெருந்தொகையான வாக்காளர்களை  மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியிற்கு கொண்டு வரக்கூடிய தலைவர்  எனவும் மேலும் இவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் கூடுதலான  சிறுபான்மை சமூகத்தோடு சேர்ந்து  பனி புரிந்ததாலும் மேலும் அவருக்கும் சுதந்திர கட்சியில் உள்ள   ஜனாதிபதி மைத்திரி உட்பட   பல பிரமுகர்களுடன் நல்லதொரு புரிந்துணர்வு உள்ளதாலும் சஜித் பிரேமதாச அவர்கள்  ஒரு வலுவான  போட்டியை இறுதி நிமிடம் வரை கோத்தபாயா ராஜபக்ச அவர்களுக்கு கொடுப்பார் எனவும்  எதிர் பார்க்கப்படுகின்றது .

எமது நாட்டில் இறுதியாக இடம்பெற்ற மூன்று தேர்தல்களில் இரு  தேர்தல்களான   2015 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே  வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்திருக்க  இறுதியில் தோல்வியை தழுவியத்தையும் அதே போன்று 2018யில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் முதல் முறையாக தேர்தலிலேயே  களமிறங்கிய பொதுஜன பெரமுனைய பெரும் வெற்றியை அடைந்ததையும் வைத்து பார்க்கும் போது இம் முறை நடைபெறவிருக்கும் 8வது ஜனாதிபதி தேர்தலிலும் இரு முன்னணி போட்டியாளர்களில் எவரும் வெற்றியடையலாம் என்பதும் உணரப்படுகின்றது.