தீயில் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு ! தாய் தலைமறைவு ! கணவர் வெளிநாட்டில் !


(ஏ.எம்.றிகாஸ்)
மட்டக்களப்பு- சந்திவெளி -ஜீவபுரம் பகுதியில் தீயில் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் 10.10.2019 மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.  இச்சம்பவம் தொடர்பில் பெண்கள் மூவர் பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.  
சிசுவின் தாய் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சிசுவின் தாய் எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணின் குடும்ப உறவினர்களே பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுவருகின்றனர். 
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பெற்றெடுக்கப்பட்ட இச்சிசுவை புதைத்துவிட்டு மேற்பகுதியில் குப்பை கூழங்கள் எரிக்கப்பட்டுள்ளன. எனினும் சிசுவை நாய் தோண்டி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பிரதேச மக்களுக்கு துர்வாடை வீசியதையடுத்து சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசுவின் தாய் எனச்சந்தேகிக்கப்படும் பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தவேளை இப்பெண் கற்பம் தரித்துள்ளதாக அறியவருகிறது. 

 ஏறாவூர்ப் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.