கிளிவெட்டிகுளம் புனரமைக்கப்படாததால் விவசாயிகள் கடும் கவலை



திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி பகுதியில் உள்ள கிளிவெட்டி குளம் நீண்ட நாட்களாக புனரமைப்புச் செய்யப்படாததால் பற்றைக்காடுகள் வளர்ந்துள்ளன.

இது குறித்து விவசாயிகள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். இக்குளத்தை நம்பி சுமார் 200 ஏக்கரில் நெற்செய்கை பண்ணப்படுகிறது.மேலும் இதைப்புனரமைத்தால் நானூறு ஏக்கருக்கு மேல் செய்கை பண்ண முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்குளத்தை புனரமைக்காததால் இருபதுக்கும் மேற்பட்ட மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை குளம் பற்றைக் காடாக காட்சியளிப்பதால் காட்டு யானைகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளன.

இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கிளிவெட்டி குளத்தை புனரமைத்து தருமாறு கிளிவெட்டி பிரதேச விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.