புலிகள் போன்றதொரு கட்டமைக்கப்பட்ட இராணுவம் மீண்டும் வராது

வடக்கிலுள்ள தாய்மார்கள் தமது பிள்ளை​களை யுத்தத்துக்காகவே ஆளாக்குகிறார்கள் என்ற தவறான எண்ணம் தெற்கில் விதைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க எம்.பி, புலிகள் அமைப்பு போன்றதொரு கட்டமைக்கப்பட்ட இராணுவம் மீண்டும் உருவாகாதெனவும் தெரிவித்தார். 

தலவத்துகொடவில் இன்று (12) நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,

தற்போது நாட்டிலிருக்கும் சட்டம் சாதாரண மக்கள் மீது மாத்திரமே பாய்வதாகவும், இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் சகலரும் சட்டத்தை மீறியே செயற்பாட்டுள்ளனர் எனவும் சாடினார். 

அதனால் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புக்களிலிருந்து குற்றச்செயல்கள், மோசடிகள் தொடர்பான விடயங்கள் பல நழுவச் செய்யப்படுவதாகவும், சகல விதமான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவகங்களிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தப்பிகொள்வதாகவும் தெரிவித்தார். 

நாட்டில்  வலுவாக பொலிஸ் கட்டமைப்பொன்று காணப்பட்டாலும், அவர்களால் கண்டறிய முடியாத அளவிலான குற்றச்சாட்டுக்களை அரசாங்கங்களே செய்துள்ளனவெச் சாடிய அவர்,  அதனால் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுனவங்களை தரமாக சீரமைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். 

அதேபோல் இன்றளவில் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அதிகளவில் பேசப்பட்டாலும் நாட்டில் காணப்படும் பாதுகாப்பற்ற தன்மையை கருத்தில் கொண்டுதான் பாதுகாப்பு கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். 

அவ்வாறிருக்க யுத்தம் நடந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது, தமக்கான சுயஆட்சிகொண்ட பிரதேச, தரைப்படை, விமானப்படை, கடற்படை என்பவற்றுடன் இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள கூடிய வகையிலான இராணுவ கட்டமைப்பாக உருவெடுத்திருந்தெனவும் தெரிவித்தார்.

மேற்படி அமைப்பொன்று மீண்டும் இலங்கையில் உருவாகுவதற்கான எந்தவொரு சாத்தியமும் இல்லை எனவும், வடக்கில் ​தொடர்ச்சியா யுத்தம் இருக்கும் என்றும், வடக்கிலுள்ள தாய்மார்கள் யுத்தத்துக்காகவே தமது பிள்ளைகளை ஆளாக்குகிறார்கள் என்றும் தவறானதொரு எண்ணக்கரு தெற்கிலுள்ள மக்கள் மத்தியில் பரப்படுவதாகவம் அவர் சாடியுள்ளார். 

அத்துடன் யுத்தத்தால் வடக்குக்கே யுத்தத்தால் அதிக பாதுகாப்பு ஏற்பட்டதால் தெற்கில் யுத்தம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று கருதும் அளவுக்கு கூட வடக்கில் உள்ள மக்கள் யுத்தம் ஏற்படுவதை விரும்பவில்லை எனவும், எந்த இனத்துக்குள்ளும் இனவாத குழுக்கள் உருவாகும் சூழலை இல்லாது செய்வோம் என்றார்.