அதிபர், ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதற்கு மாணவர்களிடமிருந்து பணம் அறிவிடுவதற்கு தடை


அரசாங்க, தனியார் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் அதிபர், ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு மற்றும் பரிசுகள் வழங்குவதற்கு மாணவர்களிடம் பண அறவிடுவதை  கல்வி அமைச்சு தடை செய்து, சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் அறிவித்துள்ளது.  
இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியின் ஒப்பத்துடன்  இச் சுற்றறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

பாடசாலையில் நடைபெறும் ஆசிரியர் தினம் மற்றும் ஆசிரியர் கௌரவிப்பு, பிரியாவிடை வைபவம் போன்ற நிகழ்வுகளுக்கு பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் பெறுவதும் அதற்கான குழுக்களை ஏற்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்படுகிறது.  பண இது பாடசாலை மாணவர்களிடையேயும் அவர்களது பெற்றோர்களிடையேயும் பல்வேறு மன உளைச்சல்களையும் பொருளாதார சுமை மற்றும் ஏற்றத் தாழ்வுகளையும் ஏற்படுத்தி வருவதுடன், இலவசக் கல்விக் கொள்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

மாணவர்களிடமிருந்து  பணம் அறிவிடுவது இலஞ்சம், ஊழல் சட்டத்தின் கீழும் தாபன விதிக் கோவை ஏற்பாடுகளுக்கமையவும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.