2019 இல் இதுவரை 5.4 பில்லியன் போலி பேஸ்புக் வலைத்தளங்கள் இடைநிறுத்தம்



இந்த வருடத்தில் இதுவரை 5 தசம் நான்கு பில்லியன் போலி பேஸ்புக் வலைத்தளங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மூன்று தசம் மூன்று பில்லியன் போலி பேஸ்புக் வலைத்தளங்கள் நீக்கப்பட்டன. மாதாந்தம் சுமார் இரண்டு தசம் ஐந்து பில்லியன் பேஸ்புக் வலைத்தளங்களில் ஐந்து சதவீதமானவை போலியானவையாக அமைந்துள்ளன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.