கணனி பயிற்சி பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு ரூ. 7,000 கொடுப்பனவுகணனி அறிவு தொடர்பிலான விடயங்களை பூர்த்தி செய்த கிராம உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி செலவை மீள் அளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

நாட்டில் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களை உள்ளடக்கிய வகையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் கிராம உத்தியோகத்தர் தரவு கட்டமைப்பின் கீழ் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கு வரும் பயனாளிகளுக்கு கணினியின் ஊடாக பல்வேறு சேவைகளை வழங்குவதற்கான பொறுப்பு கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும்.

கிராம உத்தியோகத்தர் சேவைக்கு இணைத்துக் கொள்ளும் கிராம உத்தியோகத்தரின் கணனி சார்ந்த தேவையான பயிற்சியை பூர்த்தி செய்தல் வேண்டும். இதற்கு அமைவாக தரம் 3 கிராம உத்தியோகத்தர் நியமனத்தில் இருந்து மூன்று வருட காலத்திற்குள் கணனி அறிவு தொடர்பில் தேவையான விடயங்களை பூர்த்தி செய்யும் அதிகாரிகளுக்கு அதற்கான பயிற்சி செலவை மீள அளிக்கும் வகையில் 7,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.