மட்டக்களப்பில் கட்டிடக் கலையுடன் கூடிய அழகான இல்லங்களை அமைப்பதற்கு SAMURAI HOMES

கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் கட்டிடக் கலையுடன் கூடிய அழகான இல்லங்களை அமைப்பதற்கான ஆலோசனைகளையும் மற்றும் கட்டிட நிர்மாணப் பணிகளையும்; அமுல்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் SAMURAI HOMES      அண்மையில்  திறந்து வைக்கப்பட்டது.

உங்கள் கனவு இல்லம் நனவாக மற்றும் எங்களுடன் இணைந்து உங்கள் கனவு இல்லத்தை இன்றே அமைத்திடுங்கள் எனும் தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட புதிய நிறுவகத்தை மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் எம். செல்வராஜா  மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளின் வசதி கருதி அவர்களின் கனவில் உருவாகியுள்ள இல்லங்களை நவீன இலத்திரனியில் தொழில் நுட்ப வசதிகள் மூலம் அவர்களின் ஆலோசனைக்கேற்றவாறு மாநகரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியைப் பெற்று சுகாதாரமிக்க சூழலில் எமது மக்களுக்கான சேவையாக செய்வதற்காக குறித்த முயற்சியை ஆரம்பித்துள்ளதாக நிறுவகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.