சிங்கள மக்களின் வாக்கு வங்கியில் 4 இலட்சம் அளவிலான சரிவு

சிங்கள மக்களின் வாக்கு வங்கியில் 4 இலட்சம் அளவிலான சரிவு


நேற்று நவம்பர் 16 நடைபெற்ற 8வது ஜனாதிபதி தேர்தலில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது அளிக்கப்பட்ட  வாக்குகளில் 2.66% அளவிலான சரிவு ஆரம்பகட்ட கணிப்புகளின் படி தென்படுகின்றது. ஒரு கோடி 60 இலட்சம் அளவிலான மக்கள் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த வேலையிலும் 79% அளவிலான மக்களே வாக்களித்திருப்பதாக ஆரம்பகட்ட கணிப்புகள் புலப்படுத்துகின்றன. இந்த வீழ்ச்சியானது 4 இலட்சம் குறைந்த அளவிலான  வாக்குகள் நேற்று நடைபெற்ற 8வது ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்டுள்ளதாகவும்  கருதப்படுகின்றது.

குறிப்பாக சிங்கள மக்கள் 90%  மற்றும் அதிகளவில் வாழும் மாவட்டம்களில்    2.66% அளவிலான வாக்கு சரிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அனுராதபுரம், அம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தறை, காலி, மொனராகலை,கொழும்பு போன்ற மாவட்டம்களிலேயே இந்த சரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது . மேலும் இம் முறை நடைபெற்ற 8வது ஜனாதிபதி தேர்தலில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் 15 இலட்சம் அளவிலான வாக்குகளை பெற்ற சுதந்திர கட்சி குறிப்பிட்ட இத் தேர்தலில் களமிறங்கவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டும் 

மேலும் சுதந்திர கட்சியானது கோத்தபாயாவின் பொதுஜன பெறமுனையுடன் ஒரு பொது ஒப்பந்தத்தையும் ஏற்பத்தியதோடு சுந்தந்திர கட்சியின் 15 இலட்சம் அளவிலான வாக்குகளையும் எதிர்பார்த்திருந்தது ஆனால் குறிப்பிட்ட 4 இலட்சம் அளவிலான சிங்கள மக்களின் வாக்கு சரிவானது சுதந்திர கட்சியின் வாக்குவங்கியாகவும் கருதலாம். 

இதனை விட கடந்த 5ம் திகதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் சுகததாசா உள்ளரங்கில் 4,000 அளவிலான சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் ஆகியோர்களை அழைத்து அங்கு கூடியிருந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தியையும் வழங்கினார் அதாவது வருகின்ற தேர்தலில் நாட்டையும் தமது சுதந்திர கட்சியையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தையும் வலியுறுத்தியதோடு மற்றும் இக் காரணம்களுக்காவது சஜித் அவர்களுக்கும் வாக்களிக்கும் படியும் கூறியிருந்தார.  சந்திரிகா குமாரதுங்கவின் நிலைப்பாடானது மேலும் மாற்றம்களை ஏற்படுத்துமா என்பதனை வருகின்ற மணித்தியாலம்களுக்குள் தெரியவரும் 

ஜனாதிபதி மைத்திரி ஆரம்பத்தில் கோத்தபாயா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பின்னர் நடுநிலை என்ற நிலைப்பாட்டிற்கும் தன்னை மாற்றிக்கொண்டதும் எவ்வாறான தாக்கத்தை சுதந்திர கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்படுத்தும் என்பதனையும் வருகின்ற மணித்தியாலயம்கல்லுக்குள் தெரியவரும்