பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களை கொண்ட குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முன்னாயத்த நடவடிக்கை தொடர்பாக அவதானிப்பு

ஐனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களாக வருகை தந்துள்ள பொது நலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களை கொண்ட குழுவினர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் பிரதான வாக்கெண்னும்  நிலையத்திற்கு வருகை தந்து தங்களின் அவதானிப்புக்களை செய்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரான மாணிக்கம் உதயகுமார் அவர்களையும் இவ் பொது நலவாய நாட்டு குழுவினர் சந்தித்து தேர்தல்களின் முன்னாயத்த நடவடிக்கை தொடர்பாக கேட்டு அறிந்து கொண்டனர்.

பொது நலவாய நாட்டு கண்காணிப்பு குழுவினர் வாக்குசீட்டு வாக்குபெட்டிகள் வழங்கும் நிலையங்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தனர்.

மக்கள் சுமூகமான முறையில் வாக்குகளிப்பதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகளும் இத்தோடு முதியோர்கள் விசேட தேவையுடையோர்கள் ஆகியோர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.

இதே போன்று உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து தங்கள் கண்காணிப்பு பணியினை செய்து வருவதை அவதானிக்க முடிந்தது.

பொது நலவாய நாடுகளிலிருந்து வருகைதந்த கண்காணிப்பு குழுவினர் தேர்தல் கடமையில் பங்கேற்றுருக்கின்ற தகவல் திணைக்களத்தில் ஊடக பிரிவினர்களோடு அளாவளாவியது குறிப்பிடதக்கது.