சாதாணதர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவுறுத்தல்



இம்முறை கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் நினைவூட்டும் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பொழுது பரீட்சைக்கான அனுமதி அட்டையுடன் ஆள் அடையாளத்தை உறுதி செய்யக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் கட்டாயமாகும் என்பதை பரீட்சை திணைக்களம் நினைவு படுத்தியுள்ளது.

தேசிய அடையாள அட்டை, செல்படியான கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியான வாகன சாரதிப்பத்திரம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களாகும். இம் முறை பரீட்சைக்கு 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இந்த பரீட்சை டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அத்துடன் பரீட்சை  நிலையத்திற்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களுடன் மாத்திரம் பரீட்சை  ஆரம்பிக்கும் நேரத்திற்கு 10 நிமிடங்கள் முன்னால் சமூகமளித்து பரீட்சையினை  சிறந்த முறையில் விடை அளித்து சித்தி பெற வாழ்த்தப்படுகின்றீர் .