பௌத்த எழுச்சி நிதியத்தின் கீழ் விகாரைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு



இலங்கையில் குறைந்த வசதிகளைக்கொண்ட விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பௌத்த எழுச்சி நிதியத்தின் கீழ் 11 விகாரைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று(13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவின்பேரில் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பௌத்த எழுச்சி நிதியத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள குறைந்த வசதிகளைக்கொண்ட பெருமளவு விகாரைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காணி சம்பந்தமான பிரச்சினைகள் உள்ள விகாரைகளுக்கு காணி உறுதிகளை வழங்கி அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.