பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்த முடியாத ஜ. தே.க அரசு கிழக்கு தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்குமா

தமிழர்களின் இருப்பை பாதுகாக்க ஒன்றிணைவோம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் : பூ.பிரசாந்தன்


நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் கிழக்கு தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்கின்ற தீர்மானத்தினை எப்போதோ எடுத்துவிட்டார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.

பட்டிருப்பு தொகுதியின் சங்கர்புரம் கிராமத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

மேலும் குறிப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்படுகின்ற நிலங்கள் நிர்வாகத்தினை மீட்பதற்கும் பொருளாதார ரீதியாக தமிழர்கள் வலுவாக வேண்டுமாக இருந்தால் அதற்கு அரசியல் அதிகாரம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது .

அந்த வகையில் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தங்களது இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடையின்கீழ் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கோட்டய ராஜபக்ஷவின் மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

பொருளாதார ரீதியாக நலிவடைந்து இருக்கின்ற தமிழ் சமூகம் இன்று அரசியலையும் கல்வி கலை கலாசாரம் பொருளாதாரம் என்கின்ற எந்த துறைகளிலும் நாட்டம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் எங்களிடம் நிலையான பொருளாதார கொள்கை இல்லாமலிருப்பது. ஆகவே நிலையான பொருளாதார கொள்கையை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்.


அரசியல் பசப்பு வார்த்தைகளாலும் வீர பேச்சுக்களாலும் தமிழர்களுக்கு என்றும் நியாயமான தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதை கடந்த கால அரசியல் உணர்த்தி இருக்கின்றது அன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் இருக்கின்ற போது எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் இருந்தார். அந்த காலத்திலேயே தமிழருக்கு எதிரான அதி கூடுதலான குழப்பங்களும் வன்முறைகளும் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டது அதுபோன்று ஐக்கிய தேசியக் கட்சி நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருக்கின்ற போது கிழக்கில் தமிழர்களுக்கான நில நிர்வாகம் இருப்புக்கள் மறுக்கப்பட்டது கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி கூட ஏனைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கப்பட்டது இந்த சூழல் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதால் தமிழருக்கு எதனைப் பெற்றுக்கொடுக்க முனைகின்றார்கள் என்கின்ற கேள்வி மக்களிடைளே இருக்கின்றது. கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி அரசு ஆட்சி காலத்தில் இருந்த போது அதிகமாக தமிழர்கள்பாதிக்கப்படுகின்றனர்.


இன்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிதான் இலங்கையில் நடைபெறுகின்ற இந்த சூழலில் எதனையும் பெற்றுக் கொடுக்காமல் மீண்டும் அக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் எதனை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அது மாத்திரமல்ல நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் இஸ்லாமியத் தலைவர்களும் சஜித் பிரேமதாசாவின் பின்னால் நின்ற போது கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு தமிழர்களின் இருப்பை பாதுகாக்க முடியும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கல்முனையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்த முடியாத ஜக்கிய தேசிய கட்சி அரசு கிழக்கு தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்குமா அல்லது வடக்கு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியுமா?


வடக்கின் அரசியல் சூழல் வேறு கிழக்கில் அரசியல் சூழல் வேறு இவ்வாறு தொடர்ந்து செல்லுமாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் அடையாளம் மறுக்கப்பட்டு தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற எச்சங்கள் மாத்திரமே எஞ்சி இருக்கின்ற சூழலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கமுயலுகின்றதா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாகவிருந்தால் உண்மையில் இந்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரித்து இருக்கவேண்டும் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியுடன் அவர்கள் என்றும் முரண்பட்ட தில்லை, ஐக்கிய தேசியக் கட்சி சொல்வதனை அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற தன்மையினை இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதன் மூலம் வழிகாட்டி இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்குறிப்பிட்டார்