தலைக்கவசம் இன்றி மாணவர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும் பெற்றோருக்கு எதிராக கடும் நடவடிக்கை


பாதுகாப்பு தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் மாணவர்களை அழைத்து செல்வதினால் ஏற்படக்கூடிய விபத்து தொடர்பில் பெற்றோருக்கு தெளிவு படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆனமடுவ கன்னங்கரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது.

ஆனமடுவ பொலிஸ் வாகன பிரிவு அதிகாரிகளினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உயிரின் ஆபத்து குறித்து கவனத்தில் கொள்ளாது பாதுகாப்பான தலைக் கவசம் இன்றி பெற்றோர் இதன் பின்னர் மோட்டார் சைக்கிள்களில் பிள்ளைகளை அழைத்து செல்லக்கூடாது.

அவ்வாறு அழைத்துச்செல்லும் பெற்றோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பெயரில் நாடு முழுவதிலும் வாகன விபத்துக்களை தடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.