நகருக்குள் இலவச பஸ் சேவை மூன்றாவது குழந்தைக்கு மாதாந்த உதவி என மேயர் கூறிய பல திட்டங்கள் நடக்கவில்லை



மட்டக்களப்பு மாநகர சபையின் 2020 ஆண்டிற்கான பாதீடு  நேற்று முன்தினம் ஆரம்பமானது .  இதன்  விவாதத்தின் போது சில  விடயங்களை கேட்டிருந்தேன்  அதற்கான சரியான  பதிலை மேயரால் வழங்கப்படவில்லை என தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மட்டக்களப்பு  மாநகர சபை உறுப்பினர் காந்தன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்

மாநகரசபையின் 2019 இல் குறிப்பிடப்பட்ட எந்தவொரு வேலைத்திட்டங்களும் முழுமையாக செய்யப்படவில்லை அத்துடன் மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்ட வேலைகள் மக்களுக்கு எந்தவகையிலும் திருப்திகரமாக அமையவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி 2020 பாதீட்டை கொண்டுவருவதில் எந்த பிரயோசனமும் இல்லை  என கூறி இருந்தேன்

குறிப்பாக மாநகர சபையில் திட்டங்களில்
மூன்றாவது குழந்தையை பெறுகின்ற ஒருவருக்கு மாதாந்தம் 5000  கொடுப்பேன் என்றும் ,
மக்களுக்கு நகருக்குள் இலவச பஸ் சேவையை ஆரம்பிப்பேன் என்றும் பல தீர்மானங்களை கொண்டுவந்தார்
இவை  நடைமுறைக்கு சாத்தியமற்றது என அந்த நேரத்திலே நான் கூறியிருந்தேன் ஆனால் இது சம்பந்தமான ஒரு வேலையும் அவர் செய்யவில்லை

மாநகர சபைக்கு உட்பட்ட  தனியார் பஸ் தரிப்பு நிலையம் ஒன்று நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக மாநகர சபையின் அனுமதியோடு புதிதாக அமைப்பதற்காக இருந்த பஸ் நிலையத்தை உடைத்து ஆறு கோடி ஐம்பது இலட்சம் பெறுமதியான நிர்மாணிக்கப்பட்டுள்ளது .

இது சம்பந்தமான சரியான  தீர்மானம்,வரைபடம் அதற்கான அனுமதி யார் வழங்கிய என கேள்விக்குறியா இருக்கிறது . இது தொடர்பில்
கோரியபோதும் மேயரால் சரியான விளக்கம் வழங்கப்படவில்லை

மேயருக்கு  தைரியம் இருந்தால் மட்டக்களப்பு மாநகர சபையால்  கடந்த இரு வருடங்களில் செய்த வேலைகளை பற்றி  நேரடியாக என்னோடு  ஒரு விவாதத்திற்கு வரட்டும் .