வீதி பாதசாரி கடவைகளை பயன்படுத்தாத பாதசாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை



பெருந்தெருக்களில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்காக வீதி பாதசாரி கடவையை பயன்படுத்தாமல் வீதியை கடக்க முயலும் பாதசாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதற்கு அமைவாக பாதசாரி கடவையை பயன்படுத்தாது வீதியின் குறுக்காக பயணிக்கும் பாதசாரிகளை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்பொழுது பாதசாரிகளுக்கு வீதி கடவைகளை பயன்படுத்துவதற்கான ஆலோசனை வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று வீதி பாதுகாப்பு மற்றும் மோட்டார் வாகன பிரிவு பொறுப்பு அதிகாரி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் எஸ் பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதசாரிகளுக்கு பாதசாரி கடவைகளில் செல்லக்கூடிய வகையில் பாதசாரி கடவைகள் தற்பொழுது தயார் செய்யப்பட்டு வருகின்றன. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வீதி கடவைகளில் உள்ள பெயரை விரைவாக அந்த இடத்தில் ஸ்தாபிப்பதற்கான பணிகளும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க மேலும் தெரிவித்தார்.