களுவாஞ்சிகுடியில் 'மியோவாக்கி' முறை காடு வளர்ப்பு திட்டம் !!!




நமது நாட்டில் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையுடன் கூடிய சூழலை உருவாக்கும் நோக்கில் விசேட காடு வளர்ப்பு செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவின் களுவாஞ்சிகுடி தெற்கு கிராம சேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறுகிய நிலப்பரப்பில் காடுகளை உருவாக்கும் இச் செயற்பாடானது உலகிலேயே அதிக எண்ணிக்கையான காடுகளை உருவாக்கியதன் மூலம் நோபல் பரிசுக்கு சமனான புளுபிளானட் எனும் விருதினை பெற்றவரான ஜப்பான் நாட்டு இயற்கை விஞ்ஞானி மியோவாக்கி என்பவரால் முன்னெடுக்கப்பட்டதாகும்.

இந்த மியோவாக்கி காடு வளர்ப்பு திட்டம் 04.11.2019 அன்று பி.ப 3.00 அளவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் இடம்பெற்றது. களுவாஞ்சிக்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் வி. துஷ்யந்தன் அவர்களின் நடைமுறைப்படுத்தலில் ,பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மேற்பார்வை மற்றும் வழிநடத்தலில் இக் காடு வளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சூழலுக்கு பாதுகாப்பினை அளிக்கும் பல்வேறு மரக்கன்றுகள் (265) நிகழ்வில் கலந்துகொண்டவர்களினால் நடப்பட்டது.